டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஒழுங்கு நடவடிக்கை: மேலாண் இயக்குநர் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஒழுங்கு நடவடிக்கை: மேலாண் இயக்குநர் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: கூடு​தல் விலைக்கு மது விற்​பவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என டாஸ்​மாக் நிர்​வாகம் எச்​சரித்​துள்​ளது.

தமிழகத்​தில் தற்​போது 4,765 மதுக்​கடைகள் இயங்கி வரும் நிலை​யில் கல்வி நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், பேருந்து நிலை​யங்​கள் அரு​கில் இருக்​கும் 717 மதுக்​கடைகளை 2 வாரங்​களில் மூட முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். இதையடுத்து அந்த கடைகள் படிப்​படி​யாக மூடப்​பட்டு வரு​கின்​றன.

டாஸ்​மாக் கடைகளில் மதுப்​பாட்​டில்​களுக்கு கூடு​தலாக ரூ.10 வசூலிக்​கப்​படு​வது இதற்கு முன் ஆட்சி செய்​தவர்​கள் மீது பெரும் குற்​றச்​சாட்​டாக முன்​வைக்​கப்​பட்​டது. தற்​போது புதிய ஆட்சி அமைந்த பிறகும் இந்த நடை​முறை தொடர்​கிறது என மதுபிரியர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர். ஒருசில இடங்​களில் ஏன் கூடு​தல் தொகை கேட்​கிறீர்​கள் என்ற வாக்​கு​வாதம் செய்​யும் வீடியோக்​கள் பரவி வரு​கின்​றன.

இந்​நிலை​யில் கூடு​தல் விலைக்கு மது விற்​பவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என டாஸ்​மாக் நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து டாஸ்​மாக் மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு மாநில வாணிபக் கழகம், மது​பான சில்​லறை விற்​பனைக் கடைகளில், நிர்​ண​யித்த விலை​யை​விட கூடு​தல் விலை வைத்து விற்​பனை செய்​வ​தாக புகார்​கள் தலைமை அலு​வல​கத்​துக்கு வந்​தவண்​ணம் உள்​ளன.

எனவே, கூடு​தல் விலைக்கு மதுவிற்​கும் கடை பணி​யாளர்​கள்மீது மிகக் கடுமை​யான ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். இதை தடுக்​கத் தவறும் மாவட்ட மேலா​ளர்​கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்​கப்​படு​கிறது. அனைத்து மண்​டலத்​தி​லுள்ள பறக்​கும் படை துணை ஆட்​சி​யர்​கள் தத்​தம் மண்​டலத்​தில் தெரிய வரும் புகார்​கள் குறித்​தான மது​பான சில்​லறை விற்​பனைக் கடைகளை ஆய்வு செய்​து, தவறு செய்​யும் கடை பணி​யாளர்​கள் மீது உரிய நடவடிக்​கைகள் மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​படு​கிறது. இவ்​வாறு சுற்​றறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் 21 வயதுக்கு உட்​பட்​ட​வர்​களுக்கு மது விற்​கக் கூடாது என ஏற்​கெனவே சட்​டம் இருக்​கும் நிலை​யில், அதைக் கடைபிடிக்க தற்​போது மீண்​டும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. மது வாங்கவரு​வோரின் வயது குறித்து சந்​தேகம் இருந்​தால் அடை​யாள அட்​டைகளை கொண்டு சரி​பார்க்க வேண்​டும் என்​றும் மீறு​வோர் மீது துறைரீ​தி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஒழுங்கு நடவடிக்கை: மேலாண் இயக்குநர் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in