“சிறுவர்களுக்கு ஓட்டு இருந்தால்தான் தவெக-வுக்கு வாக்கு கிடைக்கும்” - திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்

திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப் படம்

திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப் படம்

Updated on
1 min read

சிறுவர்களுக்கு ஓட்டு இருந்தால்தான் தவெக-வுக்கு தேர்தலில் வாக்குகள் கிடைக்கும் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக எல்லாம் ஒரு கட்சியா, நயினார் நாகேந்திரன் ஒரு ஆளா என்று செங்கோட்டையன் சொல்லி உள்ளார். நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தபோது பாஜக அவருக்கு எப்படி தெரிந்தது? செங்கோட்டையன் பேசியது தவறானது. அதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். பசும்பொன்னில் சசிகலா கூட்டம் நடத்துவது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை.

அதிமுக, திமுக வாக்கு சதவீதம் எவ்வளவு என்று தெரியும். தவெக தலைவர் விஜய் கையை மூடி வைத்துள்ளார். 30 சதவீதம், 50 சதவீதம் என்றுகூட அவர்கள் சொல்லலாம். வீட்டுக்கு ஒரு ஓட்டு கிடைக்கும் என தவெகவினர் சொல்கிறார்கள், வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு ஓட்டு இருந்தால்தான் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கும்.

மகளிர் உரிமைத் தொகையாக திமுக அரசு ரூ.5,000 வழங்கியது தேர்தலில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் தே.ஜ. கூட்டணியில் சேரவேண்டும், இல்லாவிட்டால் அவர்களது முகத்திரை கிழியும் என்று ஓ.பன்னீர்செல்வம் குறித்து டிடிவி தினகரன் சொல்லிய பதில்தான் எனது கருத்தும். வருகிற தேர்தலில் அதிமுக, பாஜக., கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். சிறுபான்மையின மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப் படம்</p></div>
“கூட்டணி முரண்பாடுகளை பேசித் தீர்க்கலாம்” - நம்புகிறார் திருமா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in