உதவித்தொகை உயர்வு அறிவிக்காததற்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

உதவித்தொகை உயர்வு அறிவிக்காததற்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: உத​வித்​தொகை உயர்வு குறித்து மானியக் கோரிக்​கை​யில் எந்த அறி​விப்​பும் வெளி​யி​டாததற்கு மாற்​றுத்​திற​னாளி​கள் சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, தமிழ்​நாடு அனைத்​து​வகை மாற்​றுத்​திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், பொதுச் செய​லா​ளர் பா.ஜான்​சி​ராணி ஆகியோர் தெரி​வித்​துள்​ள​தாவது: கடந்த 2 ஆண்​டு​களில், தமிழகத்​தின் அண்டை மாநிலங்​களான ஆந்​தி​ரா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களி​லும், யூனியன் பிரதேச​மான புதுச்​சேரி​யிலும் மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை உயர்த்தி வழங்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மட்​டும் கடந்த 4 ஆண்​டு​களாக உதவித்​தொகை எது​வும் உயர்த்தி வழங்​கப்​ப​டா​மல் உள்​ளது பெரும் கவலை அளிப்​ப​தாக உள்​ளது. தற்​போது, புதிய அரசு பதவி​யேற்​றவுடன் கடந்த ஜூன் 2-ம் தேதி முதல்​வரை எங்​கள் சங்க மாநில நிர்​வாகி​கள் தலை​மைச் செயல​கத்​தில் சந்​தித்​து, உதவித்​தொகையை உயர்த்தி வழங்க வலி​யுறுத்​தினோம்.

பட்​ஜெட்​டில் உதவித்​தொகை உயர்வு பற்​றிய அறி​விப்பு வரும் என எதிர்​பார்த்து காத்​திருந்த நிலை​யில், அது ஏமாற்​ற​மாகவே அமைந்​தது. தற்​போது, மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான மானிய கோரிக்​கை​யின்​போது, அதுபற்றி எந்த அறி​விப்​பும் வெளி​யிடப்​ப​டாதது மாற்​றுத்​திற​னாளி​கள் மத்​தி​யில் கடும் அதிருப்​தி​யை​யும், கோபத்​தை​யும் ஏற்​படுத்தி உள்​ளது.

போராடத் தூண்​டு​கிறது

சமூக நீதி மற்​றும் சம நீதி பேசும் அரசு, மாற்​றுத்​திற​னாளி​கள் விஷ​யத்​தில் மாற்​றாந்​தாய் மனப்​பான்​மை​யுடன் நடந்து கொள்​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

மாற்​றுத்​திற​னாளி​களை மீண்​டும், மீண்​டும் போராடத் தூண்​டு​வதற்கு இது வழி​வகுக்​கிறது. இதை எங்​கள் சங்​கம் வன்​மை​யாக கண்​டிக்​கிறது. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in