திருவண்ணாமலையில் பரிதாபம்: இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் உயிரிழப்பு

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில். (கோப்புப்படம்)

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில். (கோப்புப்படம்)

Updated on
1 min read

திருவண்ணாமலை: திரு​வண்​ணா​மலை​யில் கிரிவலம் வந்த ஆந்​திர மாநில பக்​தர் ஒரு​வர் இடுக்கு பிள்​ளை​யார் கோயிலுக்​குள் சென்ற போது மூச்சு திணறி உயி​ரிழந்​தார்.

திரு​வண்​ணா​மலை கிரிவல பாதை​யில் உள்ள முக்​கிய கோயில்​களில் இடுக்கு பிள்​ளை​யார் கோயில் உள்​ளது. இதனை மோட்ச துவாரம் என கூறப்​படு​கிறது. இக்​கோயி​லில் சிறிய குகை போன்ற அமைப்​பில் உள்​ளது. இக்​கோயி​லின் பின் வாசல் வழி​யாக ஒருக்​களித்து படுத்​த​வாறு உள்ளே நுழைந்​து, கைகளை ஊன்​றிய​வாறு நகர்ந்து முன் வாசல் வழி​யாக வெளியே வரவேண்​டும்.

குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்தவுடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்வது வழக்கம். கிரிவலம் வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இடுக்கு பிள்ளையார் கோயிலில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டுச் சென்று வருகின்றனர்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு ஆந்​திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்​டம் ராஜமகேந்​திர​வரத்​தைச் சேர்ந்த வெங்​கடேசலு மகன் தாசரிமணி​கு​மார் (36) என்​பவர் தனது குடும்​பத்​தினருடன் கிரிவலம் வந்​துள்​ளார். பின்​னர் நள்​ளிரவு சுமார் 1.30 மணி​யள​வில் இடுக்கு பிள்​ளை​யார் கோயிலுக்கு வந்​துள்​ளனர். அப்​போது,​தாசரி மணி​கு​மார் குகை வடிவத்​தில் உள்ள இடுக்கு பிள்​ளை​யார் கோயிலுக்​குள் நுழைந்​துள்​ளார். இவர், சற்று உடல் பரு​மன் அதி​க​மாக இருந்​த​தால் இவரால் குகை போன்ற பகு​தி​யில் இருந்து வெளியே வர முடி​யாமல் சிரமத்​துக்​குள்​ளாகி மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு மயக்​கமடைந்​துள்​ளார்.

அப்​போது, அங்​கிருந்த பக்​தர்​கள் மற்​றும் அவரது உறவினர்​கள் கொயிலுக்​குள் இருந்​தவரை வெளியே மீட்டு 108 ஆம்​புலன்ஸ் மூலம் திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்பி வைத்​தனர். மருத்​து​வர்​கள் அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து திரு​வண்​ணா​மலை கிராமிய காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இச் சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில். (கோப்புப்படம்)</p></div>
“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” - சிஜேபி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in