அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழப்பு

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர். விடு​முறை நாட்​களில் வழக்​கத்தைவிட அதிக அளவில் பக்​தர்​கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர். இதனால், விடு​முறை தினங்​களில் கோயி​லில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோது​கிறது.

அதன்​படி, நேற்று வார விடு​முறை தினத்​தையொட்டி காலை முதலே பக்​தர்​கள் வருகை அதி​கரித்​துக் காணப்பட்டது. பக்​தர்​கள் வருகை படிப்​படி​யாக அதி​கரித்து கோயி​லில் கூட்​டம் அலைமோ​தி​யது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் மற்​றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் சுமார் 3 மணி நேரம் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

இந்​நிலை​யில், அண்​ணா​மலை​யார் கோயி​லில் நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற அபிஷேகத்​தில், சென்​னையைச் சேர்ந்த ரவிசங்​கர் ​(68) என்​பவர் தனது குடும்​பத்​தினருடன் பங்​கேற்​றார். அப்​போது கூட்​டம் அதி​க​மாக இருந்த நிலை​யில் அவருக்கு மூச்​சுத்​தினறல் ஏற்​பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மயக்​கமடைந்​தார். அவரை மீட்டு கோயில் வளாகத்​தில் உள்ள மருத்​துவ சிகிச்சை மையத்​தில் முதலுதவி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

பின்​னர், மேல்​சிகிச்​சைக்​காக திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்து சென்​றனர். அங்கு அவரை பரிசோ​தனை செய்த மருத்​து​வர்​கள் ரவிசங்​கர் ஏற்​கெனவே உயி​ரிழந்து விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அண்​ணா​மலை​யார் கோயி​லில் அபிஷேகத்​துக்கு

பக்​தர்​களை கூடு​தலாக அனு​ம​திப்பதை தடுக்​க​வும், கோயி​லில் பக்​தர்​களுக்கு தேவை​யான அடிப்​படை வசதி​களை கூடுதலாக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in