ராயபுரம் உள்ளிட்ட 3 மண்டலங்களில் ரூ.303 கோடியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு

ராயபுரம் உள்ளிட்ட 3 மண்டலங்களில் ரூ.303 கோடியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் தண்​டை​யார்​பேட்​டை, திருவிக நகர் மற்​றும் ராயபுரம் மண்​டலங்​களில் ரூ.303 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வளர்ச்சி திட்​டப் பணி​களை ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில், பெரம்​பூர் தொகு​தி​யில், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், எருக்​கஞ்​சேரி நெடுஞ்​சாலை அரு​கில் ரூ.3 கோடி​யில் முதல்​வரின் சிறு விளை​யாட்டு அரங்​கம் கட்​டப்பட உள்​ளது.

அதன் வரைபடம் மற்​றும் முதற்​கட்ட பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேற்று ஆய்வு செய்​து, கூடைப்​பந்​து, கிரிக்​கெட் வலைப்​ப​யிற்​சி, கால்​பந்து உள்​ளிட்ட மைதானங்​களை அமைப்​பது தொடர்​பாக அலு​வலர்​களுக்கு ஆலோ​சனை​களை வழங்​கி​னார்.

வியாசர்​பாடி கால்​வா​யில் மாநக​ராட்சி மூலதன நிதி​யில் ரூ.3 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் தடுப்​புச் சுவரை உயர்த்​திக் கட்​டும் பணி மற்​றும் தூர்​வாரும் பணியை ஆய்வு செய்​தார்.

தொடர்ந்து முல்லை நகர் பகு​தி​யில் கேப்​டன் காட்​டன் கால்​வா​யில் ரூ.9.20 கோடி​யில் வெள்​ளத் தடுப்​புச் சுவர் புதி​தாக கட்​டப்​பட​வுள்ள இடத்தை பார்​வை​யிட்​டு, விரைந்து பணி​களைத் தொடங்க அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

தொடர்ந்து முல்லை நகர் மேம்​பாலம், மயானபூமி, கூட்ஸ் ஷெட் சாலை- வடக்கு ஆகிய பகு​தி​களில் பரு​வ​மழைக் காலங்​களில் மழைநீர் தேங்​காமல் இருக்​கும் வித​மாக, மாநக​ராட்சி மூலதன நிதி​யில் ரூ.3.06 கோடி​யில் மொத்​தம் 9,44,600 லிட்​டர் கொள்​ளளவு கொண்ட 3 நீர்த்​தேக்​கத் தொட்​டிகள், 400 குதிரைத் திறன் கொண்ட மோட்​டார் பம்​பு​கள் அமைக்​கும் பணி​களை ஆய்வு செய்​து, அலு​வலர்​களுக்கு ஆலோ​சனை​களை வழங்​கி​னார்.

பின்​னர் 45-வது வார்​டுக்கு உட்​பட்ட ஸ்டீபன்​சன் சாலை, கணேசபுரம் சாலை, சுந்​தரம் நகர் பிர​தான சாலைகளின் வழி​யாககூட்ஸ் ஷெட் குளத்​தில் இணைக்​கும் வகை​யில் ரூ.13.32 கோடி​யில் கட்​டப்​பட்டு வரும் மழைநீர்வடி​கால் பணி​யை​யும், கணேசபுரம் சுரங்​கப்​பாதை​யின் மேல் ரூ.226.55 கோடி​யில் கட்​டப்​பட்டு வரும் உயர்​மட்ட மேம்​பாலப் பணி​யை​யும் பார்​வை​யிட்​டார்.

திருவிகநகர் மண்​டலம், டாக்​டர் அம்​பேத்கர் கல்​லூரி சாலை​யில் ரூ.45 கோடியில் கட்​டப்​பட்டு வரும் நவீன இறைச்​சிக்​கூட கட்​டிடப் பணி​யை​யும் பார்​வை​யிட்​டார்.

பின்​னர், ராயபுரம் மண்​டலத்​துக்கு உட்​பட்ட பேசின் மேம்​பாலம் அரு​கில் உள்ள நவீன மாடு​கள் காப்​பகத்​தைப் பார்​வை​யிட்டு சாலை​யில் சுற்​றித்​திரி​யும் மாடு​களைக் காப்​பகத்​தில் பராமரிக்​க​வும், கால்​நடைகள் வளர்ப்​போருக்கு போதிய விழிப்​புணர்வை ஏற்​படுத்தவும் அறி​வுறுத்​தி​னார். இந்த ஆய்​வு​களின்​போது, வடக்கு வட்​டார துணை ஆணை​யர்​ கட்​டா ரவி தேஜா உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

ராயபுரம் உள்ளிட்ட 3 மண்டலங்களில் ரூ.303 கோடியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு
பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3,700 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத் துறை தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in