உயர் நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: அண்ணாமலை கருத்து

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on: 
1 min read

கோவை: உயர் நீதி​மன்ற தீர்ப்பு அடிப்​படை​யில் திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று வீ த லீடர்ஸ் அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை தீப விவகாரத்​தில், உயர்​ நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை மாநில அரசு பின்​பற்ற வேண்​டியது கடமை. திருப்​பரங்​குன்​றம் போன்ற முக்​கிய விவகாரத்​தில் முதல்​வர் விஜய் கருத்து சொல்​லாமல் இருக்​கிறார். நீதி​மன்​றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்​கிய பின்​னரும், கடந்த கால திமுக அரசு அதனை ஏற்​க​வில்லை. அதையே தவெகவும் ஏற்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

இத​னால் இரண்டு மதங்​களுக்கு இடையே தேவையற்ற பகைமையை உரு​வாக்​கும் வகை​யில் மாநில அரசு செயல்​படக் கூடாது. திருப்​பரங்​குன்​றத்​தில் உயர்​நீதி​மன்​றத் தீர்ப்​பின் படி, 20 அல்​லது 50 நபர்​களையோ அனுமதித்து தீபத்தை ஏற்​றுங்​கள். முஸ்​லிம்​களுக்கு இது தேவை​யில்​லாத பிரச்​சினையை செய்​யப்​போவதில்லை.

செஞ்​சி​யில் 7 வயது சிறுமி காணா​மல் போய் 35 நாட்​களைக் கடந்​தும், சிபி​சிஐடி, காவல் கண்​காணிப்​பாளர், டிஐஜி உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் விசா​ரணை​யில் ஈடு​பட்​டும் சிறுமியை இன்​னும் கண்​டு​பி​டிக்​க​வில்லை. இது கவலை அளிக்​கிறது.

குழந்​தைகள் தினத்தை முன்​னிட்டு குழந்​தைகளு​டன் கொண்​டாட்​டங்​களில் ஈடு​படும் அரசு, 35 நாட்​களுக்​கும் மேலாக காணா​மல் போயுள்ள, சிறுமியை மீட்​ப​தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்​டும். போர்க்​கால அடிப்​படை​யில் கண்​டு​பி​டிக்க வேண்​டியது, மாநில அரசின் கடமை. காவல்​துறை​யினர் விரைந்து சிறுமியைப் மீட்டு பெற்​றோரிடம் ஒப்​படைக்க வேண்​டும்.

கள்​ளக்​குறிச்சி தவெக எம்​எல்ஏ அருள்​விக்​னேஷ் மாவட்ட ஆட்​சி​யருக்கு ஆபாச தகவல் அனுப்​பிய புகார் தொடர்​பாக முதலமைச்​சர் விஜய் வாய் திறக்​காமல் இருப்​பது அதிர்ச்​சி​யாக இருக்​கிறது. சம்​பந்​தப்​பட்ட அதி​காரி மத்​திய அரசுக்கு கடிதம் எழுதி​யிருந்​தால், அதனை தலைமை செயலர் தெளிவுபடுத்த வேண்​டும். ஆனால் அனைவரும் மவுனம் காப்​பது அதிர்ச்​சி​யாக உள்​ளது. மாவட்ட ஆட்​சி​யருக்கு நடந்த விஷயம் உண்​மையா, பொய்யா என்​பதை சொல்ல வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை </p></div>
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

X