தமிழக உள்துறைச் செயலர் மாற்றம்: மணிவாசனை நியமித்தது தேர்தல் ஆணையம்

டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு மீண்டும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி​ பொறுப்பு
க.மணி​வாசன்

க.மணி​வாசன்

Updated on
2 min read

சென்னை: தமிழக உள்​துறைச் செயல​ராக இருந்த தீரஜ்கு​மாரை மாற்​றி​விட்​டு, க.மணி​வாசனை புதிய உள்​துறைச் செயல​ராக நியமித்து தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக மீண்​டும் டேவிட்​சன் தேவாசிர்​வாதமே தொடர்​வ​தாக காவல் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யானது. அன்று முதல் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழகம் முழு​வதும் தொகுதி வாரி​யாக பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, வாகன சோதனை, கண்​காணிப்பு பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இதுத​விர, தமிழகத்​துக்கு 250 கம்​பெனி துணை ராணுவப் படை​யும் ஒதுக்​கப்​பட்​டு, அவர்​களும் தொடர்ச்​சி​யாக தமிழகம் வந்​தவண்​ணம் உள்​ளனர். இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, அனைத்​துக் கட்​சி​யினரும் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.

8 எஸ்.பி.க்கள் மாற்றம்: தேர்​தல் அறி​விப்பு வெளி​யான பிறகு, புகார்​கள் அடிப்​படை​யில் அரசுத் துறை அதி​காரி​கள் மாற்​றம் செய்​யப்​படு​வது வழக்​கம். அந்த வகை​யில், விருதுநகர், நாமக்​கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்​.பி.க்​கள் ஏற்​கெனவே மாற்​றப்​பட்​டனர். பின்​னர், தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி மறுத்​தது, காவல் துறை போதிய பாது​காப்பு வழங்​காதது குறித்து தேர்​தல் ஆணை​யத்​துக்கு புகார்​கள் சென்​றன.

புதிய டிஜிபி நியமனம்: இதையடுத்​து, கடந்த ஏப்​.2-ம் தேதி தமிழக காவல் துறை​யின் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த ஜி.வெங்​கட​ராமன் மாற்​றப்​பட்​டு, அவருக்கு பதிலாக, சந்​தீப் ராய் ரத்​தோர் நியமிக்​கப்​பட்​டார்.

இதுத​விர, தாம்​பரம் காவல் ஆணை​யர் ஏ.அமல்​ராஜுக்கு பதிலாக சஞ்​சய்​கு​மார், மதுரை காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்​‌ஷித் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.​யாக இருந்த சரவண சுந்​தர் மாற்​றப்​பட்டு ரம்யா பாரதி நியமிக்​கப்​பட்​டார். சேலம் ஆட்​சி​ய​ராக அருண் தம்​பு​ராஜ், தூத்​துக்​குடி ஆட்​சி​ய​ராக விசு மகாஜன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்​து, கடந்த ஏப்​. 8-ம் தேதி தமிழக தலை​மைச் செயல​ராக இருந்த நா.​முரு​கானந்​தம் மாற்​றப்​பட்டு எம்​.​சாய்​கு​மார் புதிய தலை​மைச் செயல​ராக நியமிக்​கப்​பட்​டார். நேற்று முன்​தினம் சென்னை காவல் ஆணை​யர் அருண் மாற்​றப்​பட்​டு, அவருக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக் புதிய காவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், தமிழக உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மாரை மாற்​றி​விட்​டு, அவருக்கு பதிலாக சுற்​றுலா, பண்​பாடு, அறநிலை​யத் துறை செயல​ராக இருந்த க.மணி​வாசனை தமிழகத்​தின் புதிய உள்​துறைச் செயல​ராக நியமித்து தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 1993-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதி​காரி​யான மணி​வாசன், பொதுப்​பணி, நீர்​வளம் உள்​ளிட்ட துறை​களின் செயல​ராக பணி​யாற்​றிய​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மீண்டும் டேவிட்சன்.. இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி தலைமைச் செயலர் மாற்றப்பட்டபோது, லஞ்ச ஒழிப்​பு, ஆயுதப்​படை டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதத்​துக்கு பதிலாக சந்​தீப் மிட்​டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், லஞ்ச ஒழிப்பு மற்​றும் ஆயுதப்​படை டிஜிபி​யாக நியமிக்​கப்​பட்ட சந்​தீப் மிட்​டலுக்​கு, ஆயுதப்​படை டிஜிபி பதவியை மட்​டுமே அளித்து தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இதன்​மூலம், லஞ்ச ஒழிப்பு டிஜிபி​யாக மீண்​டும் டேவிட்​சன் தேவாசிர்​வாதமே தொடர்​வ​தாக காவல்​ துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in