சுகாதாரத் துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்

சுகாதாரத் துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்
Updated on
1 min read

சென்னை: சுகாதாரத்துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் எஸ்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் தாரேஸ் அகமது, சுகாதாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் செயலர் நிலை -3 ஆக இருந்த அனுஜார்ஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில், தொழில் மேம்பாடு மற்றும் வணிகத் துறை சிறப்பு செயலர் மரியம் பல்லவி பல்தேவ், சமூக நலத் துறை செயலராகவும், நிதித் துறை முன்னாள் செயலர் த.உதயச்சந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த குமார் ஜயந்த், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்
அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால சட்டப் படிப்புக்கு விண்ணப்பம்: சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in