

சென்னை: பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை (டிஏ) பெறப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் முழு உரிமை உண்டு என கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, நிலுவையில் இருந்த ரூ.3,637 கோடியை 60 மாத தவணைகளில் வழங்க அரசு திட்டமிட்டது. இத்தொகையை மாதம் ரூ.75 கோடியாக உயர்த்தி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், 48 மாதங்களுக்கு தலா ரூ.75 கோடியும், 49-வது மாதத்தில் மீதமுள்ள ரூ.37 கோடியும் வழங்குவதாக அரசு உறுதியளித்தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.