‘அர்னாப்’ புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

‘அர்னாப்’ புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
Updated on: 
1 min read

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலினால் தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று, தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ‘அர்னாப்’ புயலாக மாறலாம்.

மேலும், அக்.27-ம் தேதி தீவிர புயலாகவும், 28-ல் மிக தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக 28ம் தேதி முற்பகல் கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 2 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரைக்கும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

மீனவர்கள் இன்று அக்டோபர் 25 முதல் அக்டோபர் 29 வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரங்களில் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

‘அர்னாப்’ புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in