சென்னை வங்கிக் கணக்கிலிருந்து 1 மணி நேரத்தில் ரூ.1.03 கோடி திருடிய சைபர் கும்பல்

சென்னை வங்கிக் கணக்கிலிருந்து 1 மணி நேரத்தில் ரூ.1.03 கோடி திருடிய சைபர் கும்பல்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை பெருங்​குடியை தலை​மையிட​மாகக் கொண்டு செயல்​படும் தனியார் நிறு​வனம் ஒன்று ஆன்​லைன் பணப்​பரிவர்த்​தனை தளத்தை நடத்தி வரு​கிறது.

இந்த நிறுவனத்​தின் இயக்​குநர் சத்​யநாராயணன் காவல் ஆணை​யாளரிடம் புகார் அளித்​துள்ளார். அதில், “கடந்த நவம்​பர் 9-ம் தேதி காலை 11.01 மணி முதல் 11.55 மணி வரை, நிறு​வனத்​தின், தனியார் வங்கி கணக்​கில் இருந்து மர்ம நபர்​கள் சட்ட விரோத​மாக 24 முறை பணப்​பரிவர்த்​தனை செய்​துள்​ள​னர்.

இதன் மூலம் ரூ.1,03,76,860 கையாடல் செய்​துள்ளனர்” என்று குறிப்​பிட்​டுள்​ளார். நிறு​வனம் பயன்​படுத்​தும் வங்​கி​யின் ஏபிஐ (API) பணப்​பரிவர்த்​தனை வசதி​யில், அங்​கீகரிக்​கப்​பட்ட ஐ.பி. முகவரி மற்​றும் பாது​காப்பு குறி​யாக்​கச் சான்​றிதழ் மூலமாக மட்​டுமே பணம் அனுப்ப முடியும்.

ஆனால், நிறு​வனத்​தின் சர்​வர் மற்​றும் தரவுத்​தளப் பதிவு​களை ஆய்வு செய்​த​போது, இந்த 24 பரிவர்த்​தனைகளும் நிறு​வனத்​தின் கணினி அமைப்​பில் இருந்து மேற்​கொள்​ளப்​பட​வில்லை என்​பது தெரிய​வந்​த​தாக புகாரில் கூறப்​பட்​டுள்​ளது. இது​குறித்து சென்னை மத்​திய குற்​றப்​பி​ரி​வில் உள்ள சைபர் க்​ரைம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வங்கிக் கணக்கிலிருந்து 1 மணி நேரத்தில் ரூ.1.03 கோடி திருடிய சைபர் கும்பல்
3000 மெ.வா. மின்சாரம் கொள்முதல் செய்ய புதிய டெண்டர் வெளியீடு

X