காகங்கள் தொடர்ந்து இறப்பு: மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

காகங்கள் தொடர்ந்து இறப்பு: மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​காகங்​கள் இறப்​பது தொடர்ந்து வரு​வ​தால் பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும் என்று தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அறி​வுறுத்தி உள்​ளது.

சென்னை அடை​யாறு பகு​தி​யில் கடந்த ஜன.5-ம் தேதி காகங்​கள் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தன. இறந்த காகங்​களின் மாதிரி​களை ஆய்வு செய்த, மத்​திய கால்​நடை ஆராய்ச்சி நிறு​வனம்,பறவை காய்ச்​சலால் காகங்​கள் இறந்​ததை உறுதி செய்​தது. அதைத்​தொடர்ந்​து, தடுப்பு நடவடிக்கை எடுக்​கு​மாறு தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், திரு​வள்​ளூர், திருவண்​ணா​மலை, கடலுார் உள்​ளிட்ட 14 மாவட்​டங்கள் மற்​றும் புதுச்​சேரி மாநிலத்​தி​லும் காகங்​கள் தொடர்ந்து உயி​ரிழந்து வரு​கின்​றன. இதுதொடர்​பாக தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “தமிழகத்​தில் 14 மாவட்​டங்​களில் பறவை காய்ச்​சலால் காகங்​கள் உயி​ரிழந்​தா​லும், மற்ற பறவை​களுக்​கோ, மனிதர்​களுக்​கோ பாதிப்பு கண்​டறியப்​ பட​வில்​லை.

காகங்​கள் உயி​ரிழப்​பது தொடர்ந்து வரு​வ​தால், பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருப்​பது அவசி​யம். உயி​ரிழக்​கும் பறவை​களை வெறும் கையால் தொட்டு அப்​புறப்​படுத்​தக் கூடாது. காய்ச்​சல் இருந்​தால், உடனடி​யாக மருத்​து​வரிடம் சென்று சிகிச்சை பெற வேண்​டும்” என்​று தெரி​வித்​தனர்​.

காகங்கள் தொடர்ந்து இறப்பு: மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in