திருப்பரங்குன்றம் வழக்கு: தீர்ப்பை விமர்சிப்பதை ஏற்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் வழக்கு: தீர்ப்பை விமர்சிப்பதை ஏற்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை
Updated on
1 min read

மதுரை: ​திருப்பரங்குன்றம் வழக்​கின் பிர​தான மேல்​முறை​யீடு மனு விசா​ரணையை டிச. 12-க்கு தள்​ளி​வைத்த நீதிப​தி​கள், நீதி​மன்ற தீர்ப்​பு​களை பொது​வெளி​யில் தேவை​யில்​லாமல் விமர்​சிப்​பதை ஏற்க முடி​யாது என்று எச்​சரித்​துள்​ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்​தூணில் தீபம் ஏற்​றக் கோரி ராம.ரவிக்​கு​மார் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தனி நீதிப​தி, மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணிலும் தீபம் ஏற்ற உத்​தர​விட்​டார்.

இதை ரத்து செய்​யக் கோரி மதுரை ஆட்​சி​யர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலு​வலர் ஆகியோர் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தனர்.

அதில், “தீபத்​தூணில்​தான் தீபம் ஏற்ற வேண்​டுமென உரிமை கோர தனி நபருக்கு சட்ட உரிமை இல்​லை. தீபத்தை எங்கு ஏற்​று​வது என்​பது குறித்து தேவஸ்​தானம் மட்​டுமே முடி​வெடுக்க இயலும்.

இதை 1994-ல் பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவு உறுதி செய்​கிறது. தீபத் தூணில் தீபம் ஏற்​றப்​பட்​டதற்​கான ஆவணங்​களோ, கல்​வெட்​டு​களோ, ஆகம தரவுகளோ இல்​லை. கோயிலின் வழக்​கங்​களை மாற்ற தனி​நபருக்கு உரிமை கிடை​யாது.

மலை​யில் உள்ள தீபத்​தூண் இதற்கு முன்​பாக மதப் பிரச்​சினை உரு​வான, பிரச்சினைக்​குரிய எல்​லைக்​குள் உள்​ளது. இவற்​றைக் கருத்​தில் கொள்​ளாமல் தீபத்​தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். இந்த உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும்” என்று கூறப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராம கிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “இந்த விவ​காரம் தொடர்​பாக ஏராள​மான மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. பலர் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்ய விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர்” என்​றனர்.

அதற்கு அரசுத் தரப்​பில், “இந்த வழக்கு முக்​கிய​மானது. எனவே, புதி​தாக இடை​யீட்டு மனுக்​களைத் தாக்​கல் செய்ய அனு​ம​திக்க வேண்​டாம். விசா​ரணையை டிச. 12-க்கு தள்ளி வைக்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், “இந்த வழக்கு தொடர்​பாக விருப்​பம் உள்​ளவர்​கள் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​ய​லாம். அனைத்து மனுக்​களும் டிச. 12-ல் விசா​ரிக்​கப்​படும்” என்​றனர்.

தொடர்ந்து அரசு வழக்​கறிஞர்​கள், “திருப்பரங்குன்றம் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் தேவையற்ற விவரங்​கள் பகிரப்​படு​வதை தடுக்க நீதி​மன்​றம் அறி​வுறுத்த வேண்​டும்” என்று கோரினர்.

அதற்கு நீதிப​தி​கள், “நீ​தி​மன்​ற​மும், நீதிப​தி​களும் எது​வும் சொல்​ல​வில்லை என்​ப​தற்​காக எப்​படி வேண்​டு​மா​னாலும் நடந்து கொள்​ளலாம் என நினைக்க வேண்​டாம்.

இந்த நீதி​மன்​றம்​தான் அனைத்​துக்​கும் கடைசி நிவாரணம். தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வது தொடர்​பாக பிறப்​பித்த உத்​தர​வு​கள் குறித்து பொது​வெளி​யில், சமூக ஊடகங்​களில் தேவை​யில்​லாமல் விமர்சனங்​கள் செய்​வதை ஏற்க முடி​யாது” என உத்​தர​விட்​டனர்​.

திருப்பரங்குன்றம் வழக்கு: தீர்ப்பை விமர்சிப்பதை ஏற்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in