மதக் கலவரங்களை தூண்ட முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

மதக் கலவரங்களை தூண்ட முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்​கை: சென்​னை, திரு​வொற்​றியூர், தாங்​கல் பீர் பயில்​வான் பகு​தி​யில் மாநக​ராட்​சி​யின் உரிய உரிமம் பெற்று அலி என்​பவர் இறைச்சி கடை நடத்தி வரு​கிறார்.

கடந்த 16-ம் தேதி சிவாஜி என்​பவர் மற்​றும் அவருடன் சில நபர்​கள் அலி​யின் வீட்​டிற்​குள் அத்​து​மீறி நுழைந்​து மாடு​களை வெட்​டக் கூடாது என அச்​சுறுத்​தி​யதுடன், கொலை மிரட்​டலும் விடுத்​துள்​ளனர். இந்த அத்​து​மீறல் சம்​பவத்​தின்​போது, காவல் உதவி ஆய்​வாளர் கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்ட சில காவலர்​களும் உடன் சென்​றுள்​ளனர்.

காவல்​துறை​யினரின் முன்​னிலை​யிலேயே இந்த அச்​சுறுத்​தல்​களும், மதவெறி நடவடிக்​கைகளும் நடந்​துள்​ளன. இது சென்​னை​யில் திட்​ட​மிட்ட முறை​யில் மதவெறி கலவரங்​களைத் தூண்​டு​வதற்​கான ஒரு முயற்​சி​யாகும்.

இச்​சம்​பவம் குறித்து பாதிக்​கப்​பட்ட அலி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் திரு​வொற்​றியூர் தெற்கு பகுதி குழு​வினர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளனர்.

எனினும், காவல்​துறை​யினர் பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்​கை​யில் குற்​றத்​தின் தீவிரத்​தன்​மைக்கு ஏற்ப உரிய சட்​டப்​பிரிவு​கள் சேர்க்​கப்​பட​வில்​லை.

சென்​னை​யில் மதக்கல வரத்தை தூண்ட முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

மதக் கலவரங்களை தூண்ட முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என நினைவூட்டுகிறேன்: திமுக எம்எல்ஏக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in