குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் முற்றுகை

பிர​தான கதவு 3 மணி நேரத்​துக்​கும் மேல் மூடல்
குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி, நாகை ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி, நாகை ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Updated on
1 min read

நாகப்​பட்​டினம்: காவிரி​யில் தண்​ணீர் வராத​தால் பாதிக்​கப்​பட்ட குறுவை விவ​சா​யிகளுக்கு நிவாரணம் கோரி, நாகை ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் நேற்று முற்​றுகைப் போராட்​டம் நடத்​தினர். இதனால் ஆட்​சி​யர் அலு​வலக பிர​தான கதவுகள் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக மூடப்​பட்​டிருந்​தது பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தியது.

மேட்​டூர் அணை உரிய காலத்​தில் திறக்​கப்​ப​டாத​தால் பாதிக்​கப்​பட்ட குறுவை விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்​டும். கர்​நாடக அணை​யில் இருந்து தமிழகத்​துக்குச் சேர வேண்​டிய தண்​ணீரை மத்​திய அரசு பெற்​றுத்தர வேண்​டும். தவெக தேர்​தல் வாக்​குறு​தி​யில் அறி​வித்​த​படி பயிர்க்​கடன்​கள் முழு​வதை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் நாகை ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு நேற்று முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது.

போராட்​டத்​துக்​கு, மாவட்​டச் செய​லா​ளர் மாரி​முத்து தலைமை வகித்​தார். அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் கண்டன உரை​யாற்​றி​னார். இதில், விவ​சா​யிகள், விவ​சாய தொழிலா​ளர்​கள் 500-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​ கொண்​டனர். அவர்கள், போலீ​ஸார் முன்​னெச்​சரிக்​கை​யாக ஏற்​படுத்​தி​யிருந்த தடுப்​பு​களைத் தள்​ளி​விட்​டு, ஆட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு பேரணி​யாக வந்​தனர்.

<div class="paragraphs"><p>ஆட்சியர் அலுவலகத்தில் மூடப்பட்டிருந்த பிரதானக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்.</p></div>

ஆட்சியர் அலுவலகத்தில் மூடப்பட்டிருந்த பிரதானக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்.

அப்​போது, ஆட்​சி​யர் அலு​வலக பிர​தான கதவு​கள் மூடப்​பட்​ட​தால், போராட்​டக்​காரர்​கள் கதவு​களைத் தட்டி உள்ளே நுழைய முயன்​றனர். பின்​னர், ஆட்​சி​யர் வந்து பதில் அளித்​தால்​தான் கலைந்து செல்​வோம் எனக் கூறி அலு​வலக வாயி​லில் அமர்ந்து முழக்​கமிட்​டனர். மாவட்ட எஸ்​.பி. கேல்​கர் சுப்​பிரமணிய பாலச்​சந்​திரா அங்கு வந்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் போராட்​டக்​காரர்​கள் சமா​தானமடைய​வில்​லை.

ஆட்சியருடன் சந்திப்பு: அதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் கழித்து ஆட்​சி​யர் பிர​வீன்​ கு​மாரை, கே.​பால​கிருஷ்ணன், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் மாரி​முத்​து, நாகை மாலி உள்​ளிட்ட குழு​வினர் சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர். கோரிக்​கைகளை மாநில அரசின் கவனத்​துக்கு கொண்டு செல்​வ​தாக ஆட்​சி​யர் உறுதி அளித்​ததையடுத்​து, 3 மணி நேரத்​துக்​கும் மேலாக நீடித்த போராட்​டம் முடிவுக்கு வந்தது. இந்​தப் போ​ராட்​டத்​தின்​போது ஆட்​சி​யர் அலு​வலக பிரதான கதவு மூடப்​பட்​டிருந்​த​தால்​ பணி​கள்​ பா​தி​க்​கப்​பட்​டன.

<div class="paragraphs"><p>குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி, நாகை ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.   </p></div>
தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் பல்டியா? - முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in