“தவெக செய்த குதிரை பேரம் லஞ்சங்களுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியலா?” - ஆதவ் அர்ஜுனாவுக்கு பாலபாரதி கேள்வி

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

Updated on
1 min read

திண்டுக்கல்: தவெக செய்த குதிரை பேரம் என்பது லஞ்சங்களுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல் செயலா என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி, கடந்த சில தினங்களாக தவெக அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதன் விளைவாக தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம், விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என அடுத்தடுத்த தவெக அரசின் செயல்பாடுகளுக்கு, மார்க்சிஸ்ட் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறது. மீனவ மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்டவிட மாட்டோம் என மார்க்சிஸ்ட் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

இதனிடையே, மதுராந்தகம் இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடியாக, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தனது முகநூல் பதிவில், 'அதிமுக எம்எல்ஏ.க்களை பதவி விலகச் செய்ய வைத்து, தற்போது தவெக வேட்பாளர்களாக மாற்றம் பெறச் செய்ததில் எத்தனை கோடி ரூபாய் இடம்மாறியது அல்லது இலவசமாகவே நடந்தேறினவா என்பதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்பீரமாகச் சொல்ல முன்வருவாரா? அதுசரி, குதிரை பேரம் என்பது லஞ்சங்களுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல் செயலா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

<div class="paragraphs"><p>மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி</p></div>
சென்னை: ஓடும் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணியை காப்பாற்றிய ஆர்பிஎஃப் காவலருக்கு பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in