ரேஷன் அரிசி மீது கை வைத்தால் தவெக ஆட்சி பொறுப்பை இழக்கும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கருத்து

ரேஷன் அரிசி மீது கை வைத்தால் தவெக ஆட்சி பொறுப்பை இழக்கும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கருத்து
Updated on
1 min read

திருத்​தணி: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் கடந்த ஆக. 26-ம் தேதி​முதல் மக்​கள் சந்​திப்பு பிரச்​சார இயக்​கம் நடை​பெற்று வந்​தது.

இதன் நிறைவு பொதுக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பி.சண்​முகம் பங்கேற்று பேசி​ய​தாவது: வேலை​யின்​மை, விலை​வாசி உயர்வு போன்​றவற்​றுக்கு ஆட்​சி​யாளர்​களு​டைய தவறான அரசி​யல், சமூக பொருளா​தார கொள்​கைகளைத் தவிர வேறு காரணங்​கள் கிடை​யாது.

தமிழகம் மட்​டுமல்​லாமல், நாடு முழு​வதும் விலை ஏற்​றத்​தால் பொருட்​களை வாங்க முடி​யாத நிலை​யில் மக்​கள் அவதிப்​படு​கின்​றனர்.

சமீபத்​தில் தமிழக சட்​டப்​பேர​வை​யில் வரு​வாய்த் துறை அமைச்​சர் செங்​கோட்​டையன் பேசும்​போது, “ரேஷன் அரிசியை வாங்கி ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவன​மாக வழங்​கு​கின்​றனர்.

யாரும் சோறு செய்து சாப்​பிட​வில்​லை” என்​றார். மற்​றொரு அமைச்​சரோ, “ரேஷன் அரிசி​யில் இட்​லி, தோசை செய்து சாப்​பிடு​கிறார்​கள்” என்​றார். தமிழக மக்​களின் பிர​தான உணவே அரிசி​தான்.

ரேஷன் கடைகளில் வழங்​கும் அரிசியை மக்​கள் யாரும் சாப்​பிடு​வ​தில்லை என்று சட்​டப்​பேர​வை​யில் தவறான காரணங்​களைச் சொல்லி ரேஷன் கடை​யில் இனி அரிசி போட மாட்​டோம் என்ற முடிவை நோக்கி அரசு போகிறதோ என்ற அச்​சம் உள்​ளது.

இலவச அரிசியை நம்​பித்​தான் பல லட்​சக்​கணக்​கான குடும்​பங்​கள் வாழ்​கின்​றன. ரேஷன் அரிசி மீது கை வைத்​தால் தவெக ஆட்சி பொறுப்பை இழக்கும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in