‘இடைத்தேர்தலுக்காக வாக்குக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்’ - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

‘இடைத்தேர்தலுக்காக வாக்குக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்’ - பெ.சண்முகம் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

சென்னை: மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தலில் வாக்​குக்கு அதிக பணம் கொடுப்​பது தவெக​தான் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி சென்​னை​யில் மின்ட் பேருந்து நிலை​யம் அருகே மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சண்​முகம் கூறிய​தாவது: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர், மோசடி​யான வழி​யில் பாஜக ஆட்சி அமைக்க அவர்​களுக்கு ஆதர​வாக செயல்​பட்டு மிகப்​பெரிய நம்​பிக்கை துரோக்​கத்தை இழைத்​துள்​ளார். தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மாரை பதவி​யில் இருந்து உடனடி​யாக நீக்க வேண்​டும்.

தவெக கூட்​ட​ணி​யில் பாமக இடம்​பெற உள்​ள​தாக கூறப்​படு​வது வதந்தி என்றே நாங்​களும் நம்​பு​கிறோம். தவெகவை பொறுத்​தவரை எந்த பிரச்​சினை​யிலும் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் கருத்​துகளை வெளிப்​படுத்​து​வது இல்​லை.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் பிரச்​சா​ரத்​துக்கு சென்​ற​போது, சில கிராம மக்​கள் மற்ற கட்​சி​யினர் பணம் கொடுப்​ப​தாக தெரி​வித்​தனர். தவெக​தான் அதிக அளவில் பணம் கொடுத்​த​தாக கூறுகின்​றனர். இது பொது​மக்​கள் கொடுத்த வாக்​குமூலம். தூய சக்​தி, வாக்​குக்கு காசு கொடுக்க மாட்​டோம் என்​றெல்​லாம் பிரச்​சா​ரம் செய்​யும் முதல்​வர் இதற்கு பதிலளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

எம்​ஜிஆர் நகர் மார்க்​கெட் அருகே நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் பங்​கேற்​றார். அப்​போது அவர், “தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி விலக வேண்​டும். அது​வரை இடது​சா​ரி​களின் போராட்​டம் தொடரும்.

கடந்த சில நாட்​களாக இடைத்​தேர்​தலை​யொட்டி தவெக, திமுக, அதி​முக ஆகிய மூன்று கட்​சிகளை சேர்ந்த வசதி படைத்​தவர்​கள் தாராபுரம், மது​ராந்​தகம் தொகு​தி​களில் முகாமிட்​டுள்​ளனர். இவர்கள் ஒவ்​வொரு வீட்​டிலும் எவ்​வளவு வாக்கு இருக்​கிறது, எவ்​வளவு பணம் தரலாம் என கணக்​கெடுக்​கின்​றனர். வாக்​குக்கு விலை பேசுவது் குற்​றம். இந்த குற்​றச்​செயலில் ஈடுபட்ட​வர்​களை வரலாறு குற்​ற​வாளி கூண்​டில் நிறுத்​தும்” என்​றார்.

‘இடைத்தேர்தலுக்காக வாக்குக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்’ - பெ.சண்முகம் குற்றச்சாட்டு
ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in