

கும்பகோணம்: ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்திருந்தால் ஜி.கே.வாசனை அடித்திருப்பார் என மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு வாக்கு கேட்டு பேசியது: தமிழ்நாட்டில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்ககூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயம் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு உங்களால் எப்படி தாமரைக்கு வாக்களிக்க முடியும்
1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சாரத் திட்டத்தால் இலவச மின்சாரம் இருக்காது, தனியாருக்கு போய் விடும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு வேட்டு வைக்கிறது பிரதமர் மோடி அரசு. நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்கக் கூடாது, இலவச மின்சாரத்தை நிறுத்தும் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் ஜி.கே.வாசன் கட்சியினர் போட்டியிடுகின்றனர், குறைந்த பட்சம் அதிமுகவில் சின்னத்தை வாங்கி அந்த சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம்.
ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்திருந்தால், ஜி.கே.வாசனை அடித்திருப்பார், இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். தமாகாவை, பாஜகவிடம் அடகு வைத்திருக்கும் அந்த கட்சிக்கு வாக்கு அளிக்க முடியுமா.
எந்த மாநில அரசாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் போது 100 சதவீதம் வெற்றி பெற முடியாது. சாத்தான் குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்ததற்கு காரணம் மூச்சு திணறி உயிரிழந்ததாக பழனிசாமி கூறினார், ஆனால் அதற்கு காரணமான 9 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுவதற்கு அதிமுக பழனிசாமிக்கு அருகதை இல்லை.
தூக்குக்குடி ஸ்டெல்லைட் பிரச்சனையில் ஏராளமானோர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து பழனிசாமி, டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும். ஜி.கே.வாசன் கட்சி இல்லாமல் போய்விடும். தமிழகத்தை, தமிழக மக்களை, சமூக நீதியை, மதச்சார்பின்மையை பாதுகாக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
சமூக நீதியை அழிக்க வரும் அதிமுக, பாஜகவிற்கு டெப்பாசிட் கூட கிடைக்கவிடாமல் தோற்கடிக்க வேண்டும். எனவே, கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.