கடைக்கோடி கிராமங்களுக்கும் பேருந்து போக்குவரத்து வசதி: மதுராந்தகம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்குறுதி

மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தியை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.

மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தியை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.

Updated on: 
1 min read

மதுராந்தகம்: மது​ராந்​தகம் அடுத்த ஜமீன் எண்​டத்​தூர் மற்​றும் அதன் சுற்​றுப்​புற கிராமங்​களில் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட மார்க்​சிஸ்ட் கட்சி வேட்​பாளர் சுகந்​தி, கடைக் கோடி​யில் உள்ள பகுதி​களுக்கும் போதிய பேருந்து போக்​கு​வரத்து வசதி செய்து தரப்​படும் என வாக்​குறு​தி​யளித்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

மது​ராந்​தகம் தொகு​தி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர் பா.சுகந்தி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்படி, மது​ராந்​தகம் தொகு​திக்​குட்​பட்ட ஜமீன் எண்​டத்​தூர், ஒழவெட்​டி, சின்​னவெண்​மணி, அரியனூர், நீர்​பெயர், வேட்​டூர், குரு​வன்​மேடு, சாலூர், நெசப்​பாக்​கம், தேவனூர், நாகமலை, வெட்​டுக்​காடு, வெள்​ளாரை, நல்​லூர், இரும்​பேடு, தொண்​ணாடு, பெரிய​வெண்​மணி உள்​ளிட்ட பகு​தி​களில் வாக்கு சேகரித்தார்.

இதைத்​தொடர்ந்​து, தான் வெற்றி பெற்​றால் கிராமப் பகு​திகளில் மிக​வும் குறுகலான சாலைகளை விரிவுபடுத்தப்​படும், விவ​சா​யத்​தை​யும் குடிதண்​ணீரை​யும் பாது​காக்க ஏரி​களும் நீர் வரத்துக் கால்​வாய்​களும் தூர்​வாரப்​படும், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தின் கடைக்கோடி கிராமங்​களுக்கும் போதிய பேருந்து வசதி செய்து தரப்​படும் என்​றார்.

மேலும் 100 நாள் வேலை​யில் உள்ள குறை​பாடு​கள் களை​யப்​பட்டு உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை அளித்து சுகந்தி வாக்​கு​களை சேகரித்​தார். அவரை கிராம மக்​கள் மலர்​ தூவி​யும் மாலை அணி​வித்​தும் ஆரத்தி எடுத்​தும் உற்​சாக​மாக வரவேற்றனர். இதில், அக்​கட்​சி​யின் நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் என பலர் கலந்​து கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்&nbsp;சுகந்தியை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.  </p></div>
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in