“40 தொகுதிகள் கேட்கவும் எங்களுக்கு உரிமை உண்டு” - முட்டிப் பார்க்கும் மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய், திமுக-வை தீய சக்தி என்று ஒன்றுக்கு பலமுறை கூறுகிறார். அவரது கருத்தை கூட்டணி கட்சி என்கிற முறையிலும், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்கிற முறையிலும் நாங்கள் நிராகரிக்கிறோம்.

சாதி, மத ரீதியில் நாட்டைப் பிளவுபடுத்துகிற, மக்களின் வளமையான வாழ்வை கேள்விக்குறியாக்கும் கருத்தியல் சித்தாந்தங்கள் கொண்டவர்கள் தான் தீய சக்தி. விஜய்யிடம் நல்ல திட்டங்களை, கொள்கைகளை, புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எதுவுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஜன.5-ல், காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள் முன்பு நடைபெறவிருக்கும் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. வரும் 26-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு மற்றும் நல்லகண்ணு நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிப். 7-ம் தேதி கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பொங்கல் பண்டிகைக்கு நிதி நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு பணம் வழங்க வேண்டும். தமிழக அரசால் முடியவில்லை என்றால் மத்திய அரசு தர வேண்டும். கூட்டணியில் 30, 40 தொகுதிகளை கேட்க எங்களுக்கு தார்மிக உரிமை உண்டு. எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதை ஜனநாயக விரோதமாக முதல்வர் எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம்; வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.
“ஹெச்.ராஜாவின் குரலாக ஒலிக்கும் விஜய்” - திருமாவளவன் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in