“திரைப்பட பிரச்சினையை கிளப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம்” - மு.வீரபாண்டியன் விமர்சனம்

மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்

மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்

Updated on
1 min read

ஓசூர்: ​திரைப்பட பிரச்​சினையை கிளப்பி மக்​களை திசை திருப்ப வேண்​டாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​தார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் தளி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிடும் இந்​திய கம்​யூனிஸ்ட் வேட்​பாளர் டி. ராமச்​சந்​திரனை ஆதரித்​து, தேன்​கனிக்​கோட்​டை​யில் வாக்கு சேகரிப்பில் ஈடு​பட்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகள் இயற்​கையோடு போராடி மற்​றவர்​களுக்கு வாழ்​வளிப்​பவர்​கள். அவர்​களுக்கு வழங்​கப்​படும் ஊக்​கத்​தொகை என்​பது சலுகை அல்ல; அது அவர்​களின் உரிமை.

விவ​சா​யிகளுக்​கான ஊக்​கத்​தொகையை நிறுத்​தச் சொல்​லும் மத்​திய நிதி​யமைச்​சரின் போக்கை இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி கண்​டிக்​கிறது. கார்ப்​பரேட் நிறு​வனங்​களுக்​குக் கோடிக்​கணக்​கில் வரிச்​சலுகை​யும், கடன் ரத்​துகளும் செய்​யும் மத்​திய அரசு, விவ​சா​யிகளின் ஊக்​கத்​தொகையை மட்​டும் நிறுத்​தச் சொல்​வது ஏன்?

நாட்​டின் எதிர்​காலத்​தைத் தீர்​மானிக்​கும் முக்​கிய​மான தேர்​தல் நேரத்​தில், தேவை​யில்​லாத திரைப்​படப் பிரச்​சினை​களைக் கிளப்பி மக்​களின் கவனத்​தைச் திசை திருப்ப வேண்​டாம். எத்​தகைய நிகழ்​வும் சட்​டத்​துக்கு உட்​பட்டே நடக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்</p></div>
“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in