

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
சென்னை: தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்து, அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்த லில் வெற்றி, தோல்வி என்பதை அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளே தீர்மானிக்கின்றன. முதலாளித்துவ கட்சிகள் வாக்குகளை விலைக்கு வாங்கும் போக்கு ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. எனவே, தேர்தல் முறையில் உரிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.