தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இ.கம்யூனிஸ்ட் போட்டி: தவெக ஆதரவு கோரி அமைச்சர் ஆனந்திடம் கடிதம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இ.கம்யூனிஸ்ட் போட்டி: தவெக ஆதரவு கோரி அமைச்சர் ஆனந்திடம் கடிதம்
Updated on
1 min read

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. தவெகவிடம் ஆதரவு கோரி இன்று கடிதம் தந்தனர். மேலும், காங்கிரஸ், விசிக கட்சிகளிடமும் ஆதரவு கோரியுள்ளோம் என்று மாநிலச் செயலர் சலீம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி கடந்த முறை செயல்பாட்டால் பிளவடைந்தது. தற்போது தவெக கூட்டணியில் கடந்த முறை புதுச்சேரியில் மனிதம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில் தவெக கூட்டணியில் மீண்டும் போட்டியிடுவதாக விநாயகம் தெரிவித்திருந்தார். அத்துடன் அக்கட்சித் தலைவர் எம்எல்ஏ நேரு டெல்லி சென்று காங்கிரஸாரை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு செய்துள்ளது. இத்தேர்தலில் கட்சியில் வேட்பாளராக மாநிலச்செயலர் சலீமை இக்கட்சியின் நிர்வாகக்குழு தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் மாநில செயலாளர் சலீம் மற்றும் நிர்வாகிகள் சென்னை சென்று தவெக ஆதரவை இன்று கோரியுள்ளார்.

இதுதொடர்பாக சலீமிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி. கடந்த முறை போட்டியிடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறோம். இதற்காக காங்கிரஸ், விசிக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளோம். சென்னையில் தவெக ஆதரவு கோரி கடிதத்தை அமைச்சர் ஆனந்திடம் தந்துள்ளோம். இம்முறை தவெக, காங்கிரஸ், விசிக, மற்றும் சிபிஎம் ஆதரவுடன் நிச்சயம் போட்டியிடுவோம்” என்றார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இ.கம்யூனிஸ்ட் போட்டி: தவெக ஆதரவு கோரி அமைச்சர் ஆனந்திடம் கடிதம்
“மதுவிலக்கு மீதான நிலைப்பாட்டை தவெக தெளிவுபடுத்த வேண்டும்” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in