பாஜகவை எதிர்த்து நாடுதழுவிய மக்கள் சந்திப்பு பேரணி: இந்திய கம்யூனிஸ்ட் செயலர் டி.ராஜா தகவல்

டி.ராஜா | கோப்புப் படம்
டி.ராஜா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நேரு​வை​யும், மோடியை​யும் ஒப்​பிட்​டுப் பார்ப்​பதே மிகப்​பெரிய மோசடி. பாஜகவை எதிர்த்து நாடு முழு​வதும் பேரணி​யாகச் சென்று மக்​களை சந்​திக்க உள்​ள​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச்​செய​லா​ளர் டி.​ராஜா தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பாஜகவை எதிர்த்து அகில இந்​திய அளவில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் ஆக.6 முதல் 15-ம் தேதி வரை அனைத்து மாநிலங்​கள், மாவட்​டங்​களில் பேரணி​யாகச் சென்று மக்​களை சந்​திக்க உள்​ளோம். நாட்​டின் நிலை​மையை விளக்​கி, மக்​கள் ஒன்​றுபட வேண்​டும் என்று திட்​ட​மிட்டு செயல்பட உள்​ளோம்.

பிரதமர் மோடி ஆட்​சி​யில் பின்​பற்றி வரு​கிற கொள்​கைகளெல்​லாம் மக்​களுக்கு எதி​ரானவை​. பிரதமர் நரேந்​திர மோடி நேரு​வையே மிஞ்​சி​விட்​டார், நேரு​வுக்கு பின்னுக்கு தள்ளி இவர் முன்​னுக்கு போகிறார் என்ற அளவுக்கு பாஜக பிரச்​சா​ரம் செய்​கிறது. நேரு​வை​யும், மோடியை​யும் ஒப்​பிட்​டுப் பார்ப்​பதே மிகப்​பெரிய மோசடி​யாகும்.

இண்​டியா கூட்​டணி மற்​றும் காங்​கிரஸ் கட்​சி​யின் அணுகு​முறை பாஜகவை முறியடிப்​ப​தற்​கான முறை​யாக வலு​வடைய வேண்​டும். காங்​கிரஸ் கட்சி தற்​போது மாநிலக் கட்​சிகளை, இடது​சா​ரிக் கட்​சிகளை, உரிய வகை​யில் மதிப்​பளிக்க வேண்​டும். அவர்​களோடு நம்​பகத்​தன்​மையோடு செயல்பட வேண்​டும். இவ்வாறு தெரிவித்தார்.

டி.ராஜா | கோப்புப் படம்
கூடங்குளம் அணுமின் நிலைய 5-வது அலகில் வெற்றிகரமாக 320 டன் அணு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in