சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் வளாகத்தில், வரும் மார்ச் 2-ம் தேதிமுதல் நீதிமன்றங்கள் தனது அன்றாடப் பணிகளைத் தொடங்கும் என, உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக்கல்லூரி இயங்கி வந்த பழமையான பாரம்பரிய கட்டிடம் பல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடமாக கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கூடுதல் கட்டிடத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பழைய சிவில், குற்றவியல் மற்றும் ரிட் வழக்குகளின் இறுதி விசாரணைக்கான வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது.
அதன்படி, கூடுதல் கட்டிடத்தில் உள்ள நீதிமன்றங்கள் தனது அன்றாடப் பணியை வரும் மார்ச் 2-ம் தேதி முதல் தொடங்கும் என உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.