ஆதி திராவிடர் நலத்துறை இணைச் செயலர் மீதான நில அபகரிப்பு வழக்கில் 6 மாதத்தில் இறுதி அறிக்கை: போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஆதி திராவிடர் நலத்துறை இணைச் செயலர் மீதான நில அபகரிப்பு வழக்கில் 6 மாதத்தில் இறுதி அறிக்கை: போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆதி திரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் அரசு இணைச் செயல​ரான எஸ்​தர் ராணி மீதான நில அபகரிப்பு வழக்​கில், 6 மாதங்​களில் விசா​ரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது, இது தொடர்​பாக, சென்​னை, ராயபுரத்​தைச் சேர்ந்த வி.​முத்​துகுரு​சாமி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ``சென்​னை, தண்​டை​யார்​பேட்​டை, கும்​மாளம்​மன் கோயில் தெரு​வில் நானும், எனது நண்​ப​ரான செல்​வ​ராஜூம் இணைந்து ஒரு கிர​வுண்டு நிலத்தை விலைக்கு வாங்​கினோம். செல்​வ​ராஜ் திடீரென இறந்து விட்ட நிலை​யில், அவரது மனைவி கிறிஸ்​டி​னா​வும், நானும் அந்த நிலத்தை பிரித்​துக் கொள்ள ஒப்​பந்​தம் செய்​தோம்.

ஆனால் கிறிஸ்​டி​னா, அவரது மகன் ஹெப்​பின் பால், ராயபுரத்​தைச் சேர்ந்த சாந்தி ஆகியோர் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் இணைச் செயல​ராக பதவி வகிக்​கும் அதி​காரி எஸ்​தர் ராணி​யின் துணை​யுடன், சென்னை மாநக​ராட்சி பொறி​யாளரை மிரட்டி போலி​யான ஆவணங்​கள் மூலம், எனக்கு சேர வேண்​டிய நிலத்​தை​யும் அபகரிக்க முயன்​றனர்.

இது தொடர்​பாக, நான் அளித்த புகாரின்​பேரில் கிறிஸ்​டி​னா, அதி​காரி எஸ்​தர் ​ராணி உள்​ளிட்​டோர் மீது காசிமேடு போலீ​ஸார் கடந்த 2024-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​தும் மேற்​கொண்டு எந்த விசா​ரணை​யும் நடத்​த​வில்​லை.

எனவே, இந்த வழக்​கில் விரை​வாக விசா​ரணை நடத்தி இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்ய போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும்'' எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்​கு, நீதிபதி எம். நிர்​மல்​கு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம். பூப​தி, தமிழக அரசின் உயர​தி​காரி​யான எஸ்​தர்​ராணி தனது அதி​காரத்தை தவறாக பயன்​படுத்தி அழுத்​தம் கொடுத்து வரு​வ​தால் மனு​தா​ரர் மன ரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். தற்​போது, வழக்கை வாபஸ் பெறக்​கோரி மிரட்​டல்​களும் வரு​வ​தாக வாதிட்​டார்.

அப்​போது, தமிழக அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் லியோ​னார்டு அருள் ஜோசப் செல்​வம், ``இந்த வழக்​கில் விசா​ரணை முடிவடை​யும் தரு​வா​யில் உள்​ளது. 6 மாதங்​களுக்​குள் இறுதி விசா​ரணை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும்'' என்​றார்.

இந்த விவாதங்களை கேட்ட நீதிப​தி, ``இந்த வழக்​கில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீதான விசா​ரணையை விரை​வாக முடித்​து, 6 மாத காலத்​துக்​குள் இறுதி வி​சா​ரணை அறிக்​கையை சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​'' என உத்​தர​விட்​டு வழக்​கை முடித்து வைத்தார்.

ஆதி திராவிடர் நலத்துறை இணைச் செயலர் மீதான நில அபகரிப்பு வழக்கில் 6 மாதத்தில் இறுதி அறிக்கை: போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு
போதையை ஒழிக்க அனைத்து மாவட்டங்களிலும் ‘போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in