புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டுமானங்களை இடிக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டுமானங்களை இடிக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​திருநீர்​மலை​யில் புறம்போக்கு நிலத்​தில் குட்​டையை நிரப்பி கட்​டப்​பட்​டுள்ள வணிக வளாகங்​களை இடிக்கக் கோரிய வழக்​கில், தமிழக அரசு பதிலளிக்க உத்​தர​வி்டப்பட்டுள்ளது.

சென்னை திருநீர்​மலையை அடுத்த திரு​மங்​கை​யாழ்​வார்​புரத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஓ.உதயக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “திருநீர்​மலை​யில் அரசு புறம்​போக்கு என வகைப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் பல ஆண்​டு​களாக குவாரி குட்டை உள்​ளது.

தற்​போது தாம்​பரம் மாநக​ராட்சி நிர்​வாகம், குட்​டையை மண், கட்​டிட இடி​பாடு​களைக் கொண்டு நிரப்பி 5 வணிக வளாகங்​களை​யும், பொது கழிப்​பறை​களை​யும் கட்​டி​யுள்​ளது. மழைக்​காலங்​களில் இப்​பகு​தி​யில் தண்​ணீர் தேங்​காதபடி மழைநீர் இந்த குட்​டைக்​குத்​தான் செல்​லும்.

தற்​போது குட்​டையை மூடி விட்​ட​தால் அப்​பகு​தி​யில் வெள்​ளப் பெருக்கு ஏற்​படும் அபா​யம் உள்​ளது. அத்​துடன் குடி​யிருப்​பு​களின் அருகே கட்​டப்​பட்​டுள்ள பொது கழிப்​பறை​களால் அப்​பகு​தி​யில் சுற்​றுச்​சூழலும் பாதிக்​கப்​படும் நிலை உரு​வாகி​யுள்​ளது.

எனவே குட்​டையை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்ள வணிக வளாகங்​கள் மற்​றும் பொது கழிப்​பறை​களை இடித்து அகற்​றி​விட்​டு, அந்த இடத்தை பழைய நிலைக்கு மீட்​டுரு​வாக்​கம் செய்ய தாம்​பரம் மாநக​ராட்​சிக்​கும், தமிழக அரசுக்​கும் உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.சுரேந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக தமிழக வரு​வாய் துறை, தாம்​பரம் மாநக​ராட்சி, செங்​கல்​பட்டு மாவட்ட நிர்​வாகம் உள்​ளிட்​டோர் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூன் மாதத்​துக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.

புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டுமானங்களை இடிக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; விதிகளை வகுக்க கோரி வழக்கு: 8 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in