“தேர்தலில் ஊழல் நடந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து!” - லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ்.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ்.

Updated on
1 min read

திருப்​பூர் மாவட்​டம் உடுமலை வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் சார்​பில் லோக் பால் மற்​றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்​தரங்கு நேற்று நடை​பெற்​றது. சங்​கத்​தின் தலை​வர் சி.​முரு​கானந்​தம் தலைமை வகித்​தார்.

தமிழ்​நாடு லோக் ஆயுக்தா உறுப்​பினர் வீ.​ராம​ராஜ் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்று பேசி​ய​தாவது: வாக்​கு, வாக்​காளர், தேர்​தல்​கள் ஜனநாயகத்​தின் அடித்​தளங்​கள். வாக்​கு, வாக்​காளர், தேர்​தல்​கள் ஆகியவை குறித்த கல்வியே வாக்​காளரியல் கல்​வி​யாகும்.

வாக்​கு,வாக்​காளர், தேர்​தல் ஆகிய அம்​சங்​களில் ஊழல் ஏற்​படும்​போது ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய ஆபத்து ஏற்​படும். வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு இல்​லாதது, ஊழல் மற்​றும் சர்​வா​தி​காரம் ஆகியன ஜனநாயகத்​தின் எதிரி​கள். வாக்​காளர்​களிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்த வாக்​காளரியல் கல்​வியை அனை​வருக்​கும் கொண்டு செல்​வது அவசி​யம்.

வாக்​காளர்​களின் உரிமை​கள் பாதிக்​கப்​பட்​டால் அதைப் பெற்​றுத் தரவும், வாக்​காளரியல் கல்​வியை அனை​வருக்​கும் கொண்டு செல்​ல​வும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வாக்​காளர் உரிமை​கள் பாது​காப்பு ஆணை​யம் அமைக்​கப்பட வேண்​டும். தேர்​தல் வழக்​கு​களை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க சிறப்பு தேர்​தல் தீர்ப்​பா​யங்​கள் அமைக்​கப்பட வேண்​டும். தேர்​தல் ஆணை​யம், வாக்​காளர் ஆணை​யம், தேர்​தல் தீர்ப்​பா​யம் ஆகிய​வற்றை தேர்​தல் நிறு​வனங்​களாக அரசி​யலமைப்​பில் வகைப்​படுத்த வேண்​டும்.

சட்​டங்​களை இயற்ற நாடாளு​மன்​ற​மும், சட்​டப்​படி ஆட்​சியை நடத்த அரசாங்​க​மும், சட்​டத்​தில் ஏற்​படும் பிரச்​சினை​களை தீர்க்க நீதி​மன்​றங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்​றுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளதற்கு இணை​யான அந்​தஸ்தை தேர்​தல் நிறு​வனங்​களுக்​கும் அரசி​யலமைப்பு வழங்க வேண்​டும். இதன் மூலம் வாக்​கு, வாக்​காளர் மற்​றும் தேர்​தல்​களில் ஏற்​படும் ஊழல்​களை அகற்​ற​வும், மக்​களாட்​சியை பாது​காக்​க​வும் இயலும்.

லோக் ஆயுக்தா என்​ப​தற்​கும், லோக் அதாலத் என்​ப​தற்​கும் உள்ள வேறு​பாடு பெரும்​பாலானோருக்கு தெரிவ​தில்​லை. லோக் ஆயுக்தா என்​றால் ஊழலுக்கு எதி​ரான மாநில அளவி​லான உயர் விசா​ரணை அமைப்​பாகும். அனைத்து நீதி​மன்​றங்​களி​லும் வழக்​கு​களை சமரச பேச்​சு​ வார்த்தை மூலம் தீர்த்​துக்கொள்​ளும் வழி​முறைக்​கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். நல்​லாட்​சிக்​கும், மக்​களின் நல்​வாழ்​வுக்​கும் ஊழல் மிகப்​பெரிய எதிரி​யாகும்.

பிரதமர், மத்​திய அமைச்​சர்​கள், மத்​திய அரசின் அனைத்து அலு​வலர்​கள் மீதான ஊழல் குற்​றச்​சாட்​டு​களை விசா​ரிக்க லோக்​பால் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதைப்​போலவே முதலமைச்​சர், அமைச்​சர்​கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்ட மாநில அரசின் அலு​வலர்​கள் மீதான ஊழல் குற்​றச்​சாட்​டு​களை விசா​ரிக்க தமிழ்​நாடு லோக் ஆயுக்தா உள்​ளது. லோக்​பால் மற்​றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்​புணர்வு மக்​களிடையே அதி​கரிக்க வழக்​கறிஞர்​கள் சங்​கங்​களும் தன்​னார்​வ அமைப்​பு​களும்​ பாடு​பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ்.</p></div>
வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் 47 பேர் உயிரிழப்பு: புரட்டிப் போட்ட கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in