மாநகராட்சியின் வாட்ஸ்-அப் சேவை வழியாக குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

மாநகராட்சியின் வாட்ஸ்-அப் சேவை வழியாக குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சி வாட்​ஸ்-அப் சேவை வழி​யாக, குடிநீர், கழி​வுநீர் கட்​ட​ணங்​கள், வரி​களை செலுத்​தும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சென்னை மாநக​ராட்​சி, பொது​மக்​களின் வசதிக்​காக பல்​வேறு குடிமை சேவை​களை இணை​யதளம் மற்​றும் வாட்​ஸ்-​அப் மூலம் வழங்கி வரு​கிறது.

சொத்து வரி செலுத்​துதல், பிறப்பு மற்​றும் இறப்பு சான்​றிதழ் சேவை​கள், புகார் பதிவு மற்​றும் கண்​காணிப்பு உள்​ளிட்ட 42 சேவை​களு​டன், தற்​போது சென்னை குடிநீர் வாரி​யத்​தின், குடிநீர் மற்​றும் கழி​வுநீர் கட்​ட​ணங்​களை​யும் வாட்​ஸ்​-அப் வழி​யாக செலுத்​தும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள் மாநக​ராட்​சி​யின் அதி​காரப்​பூர்வ வாட்​ஸ்​-அப் சாட்​பாட் எண் 9445061913 மூலம் தங்​களது சொத்து வரி, குடிநீர் மற்​றும் கழி​வுநீர் கட்​ட​ணங்​களை எளி​தாக​வும், பாது​காப்​பாக​வும் செலுத்​தலாம்.

மேலும், கட்டண விவரங்​கள், நிலு​வைத் தொகைகள் மற்​றும் ரசீதுகளை​யும் உடனுக்​குடன் பெற்​றுக் கொள்​ளலாம். இச்​சேவை​கள் மூலம் பொது​மக்​கள் அலு​வல​கங்​களுக்கு நேரில் செல்ல வேண்​டிய அவசி​யம் குறைவதுடன், நேர​மும், செல​வும் சேமிக்​கப்​படு​கிறது. பொது​மக்​கள் தங்​களுக்கு ஏற்ற நேரத்​தில் இந்த சேவை​களைப் பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

மாநகராட்சியின் வாட்ஸ்-அப் சேவை வழியாக குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்
போதையை ஒழிக்க அனைத்து மாவட்டங்களிலும் ‘போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in