குன்னூரில் டயர் பஞ்சரால் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன?

மண் சரிவில் சிக்கி பிறகு கயிறு கட்டி மீட்கப்பட்ட கேரள மாணவ, மாணவிகள்.

மண் சரிவில் சிக்கி பிறகு கயிறு கட்டி மீட்கப்பட்ட கேரள மாணவ, மாணவிகள்.

Updated on:
2 min read

குன்னூர்: அரசுப் பேருந்து மண்ணில் புதைவதற்கு முன்னர் டயர் பஞ்சர் ஆனதால், பயணிகள் பலர் உயிர் தப்பியுள்ளனர்.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசுப் பேருந்து மீது மண் சரிந்து விழுந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். நடத்துநர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மண் சரிவில் சிக்கி மீட்கப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் கேசவன் கூறும்போது, “பர்லியாறு அருகே மலைப்பாதையில் 2 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இனிமேல் பேருந்தை இயக்கினால் ஆபத்து எனக் கருதி, பேருந்தை பின்நோக்கி எடுத்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்த ஓட்டுநர் முயன்றார்.

அதற்குள் மழைநீர் பெருக்கெடுத்து மண்ணுடன் சரிந்து, நாங்கள் சுதாரிப்பதற்குள் பேருந்தின் மீது விழுந்து அழுத்தியது. பல மணி நேரம் மண்ணில் புதைந்தபடி நான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். மீட்புப் குழுவினர் என்னை மீட்டனர்” என்றார்.

குன்னூர் சாலை பர்லியாறு அருகே, சேறும் சகதியுமாக மாறிய சாலையை பொக்லைன் உதவியுடன் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

குன்னூர் சாலை பர்லியாறு அருகே, சேறும் சகதியுமாக மாறிய சாலையை பொக்லைன் உதவியுடன் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

தப்பிய பயணிகள்: விபத்தில் சிக்கிய பேருந்து ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட போது, 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குன்னூர் அருகே வந்த போது மழை அதிகமாக இருந்ததாலும், பேருந்து டயர் பஞ்சர் ஆனதாலும் பயணிகள் பலர் இறங்கினர். பின்னர், டயர் சரி செய்யப்பட்டு புறப்பட்ட போது ஓட்டுநர், நடத்துநருடன் சேர்த்து 8 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். பேருந்து பஞ்சர் ஆகி பயணிகள் இறங்கியதால் உயிரிழப்பு அதிகரிப்பு தவிர்க்கப்பட்டது.

266 மாணவர்கள் மீட்பு: கேரளாவில் இருந்து தனியார் பள்ளியைச் சேர்ந்த 136 மாணவர்கள், 17 ஆசிரியர்கள் என 153 பேர் மூன்று பேருந்துகளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பர்லியாறில் மண் சரிவு பகுதியில் சிக்கிய இவர்கள் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மண் சரிவில் பேருந்து நொறுங்கி காயமடைந்த நடத்துநர் கேசவன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மண் சரிவில் பேருந்து நொறுங்கி காயமடைந்த நடத்துநர் கேசவன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல, கோட்டயத்தில் இருந்து மற்றொரு பள்ளியைச் சேர்ந்த 105 மாணவர்கள், 8 ஆசிரியர்கள் என 113 பேர் நான்கு பேருந்துகளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பர்லியாறில் சிக்கிய இவர்களும் மீட்கப்பட்டு, கல்லாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரு பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 266 பேர் மீட்கப்பட்டனர்.

மண் சரிவில் சிக்கி பிறகு கயிறு கட்டி மீட்கப்பட்ட கேரள மாணவ, மாணவிகள்.

தேனி, திண்டுக்கல், மதுரைக்கு ரெட் அலர்ட்; தஞ்சை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in