திறன் சார்ந்த கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது: ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்தர் கருத்து

கோவை பாரதியார் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன்,  ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி, உயர்கல்​வி துறைச் செயலர் பொ.சங்​கர் உள்ளிட்டோர்.

கோவை பாரதியார் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி, உயர்கல்​வி துறைச் செயலர் பொ.சங்​கர் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

கோவை: ​திறன் சார்ந்த கல்வி முறையை, தேசிய கல்விக் கொள்கை ஊக்​குவிக்​கிறது என்று ஹோமி​பாபா தேசி​யக் கல்வி நிறுவன துணைவேந்​தர் காமாட்சி முதலி கூறி​னார்.

கோவை பார​தி​யார் பல்​கலை.​யில் 40-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. தமிழக உயர்​கல்​வித் துறைச் செயலர் பொ.சங்​கர் வாழ்த்​துரை வழங்​கி​னார். ஆளுநரும், பல்​கலை. வேந்​தரு​மான ஆர்​.என்​.ரவி தலைமை வகித்​து, 1,500-க்​கும் மேற்​பட்​டோருக்கு பட்​டங்​கள் மற்​றும் சிறப்​பிடம் பெற்​றவர்​களுக்​குப் பதக்​கங்​களை வழங்​கி​னார்.

பல்​வேறு பாடப்பிரிவு​களைச் சேர்ந்த 92,287 பேர் பட்​டம் பெற்​றனர். விழா​வில், முதன்மை விருந்​தின​ராகப் பங்​கேற்ற ஹோமி​பாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்​தர் காமாட்சி முதலி பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் படையெடுப்​புக்கு முன்பு தரமான கல்​வி​முறை இருந்​தது. படையெடுப்​புக்​குப் பின்​னர் பாரம்​பரியமிக்க கல்வி முறை அழிக்​கப்​பட்​டது.

பிரிட்​டிஷ் காலத்​தில் நிர்​வாக அடிப்​படையி​லான கல்வி முறைவழங்​கப்​பட்​டது. சுதந்​திரத்​துக்​குப் பின்​னர் கல்​வித் தரத்தை உயர்த்த பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக, தேசிய கல்விக் கொள்கை சிறப்​பான கல்வி முறையை​யும், திறன் சார்ந்த கல்வி முறையை​யும் ஊக்​குவிக்​கிறது.

தேசிய அளவில் உயர் கல்வி பெறு​வோர் சதவீதம் 28 ஆகும். அதே​நேரத்​தில், தமிழகத்​தில் இது 47 முதல் 50 சதவீத​மாக உள்​ளது. தமிழக அரசின் ‘நான் முதல்​வன்’ திட்​டம், ‘தமிழ் புதல்​வன்’ திட்​டம் ஆகிய​வற்​றின் மூலம் உயர் கல்வி பயில்​வோரின் எண்​ணிக்​கை அதி​கரித்​துள்​ளது. மேலும், பெண் கல்விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, உயர்​கல்வி பயிலும் மகளிரின் எண்​ணிக்கை உயர்ந்​துள்​ளது. மத்​திய, மாநில அரசுகள் சார்​பில் தமிழகத்​தில் அதிக அளவில் கல்வி நிறு​வனங்​கள் உள்​ள​தால்​தான் இது சாத்​தி​ய​மாகி​உள்​ளது.

‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய நமது மின் உற்​பத்​தியை 10 சதவீதம் வரை அதி​கரிக்க வேண்​டும். அணுசக்தி உற்​பத்​தியை ஊக்​கப்​படுத்​தும் வகை​யில், மத்​திய அரசு சார்​பில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், அணுசக்தி உற்​பத்​தித் துறை​யில் தனி​யார் நிறு​வனங்​களும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், பல்​கலை. பதி​வாளர் ஆர்​.​ராஜவேல், தேர்​வாணை​யர் கே.​விஜய​ராணி மற்​றும் துறைத் தலை​வர்​கள், பேராசிரியர்​கள்​, மாணவ, ​மாண​விகள்​ கலந்​து​கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>கோவை பாரதியார் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன்,  ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி, உயர்கல்​வி துறைச் செயலர் பொ.சங்​கர் உள்ளிட்டோர். </p></div>
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in