“இரண்டாம் இடத்துக்காக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி” - அமைச்சர் பிரபு

அமைச்சர் பிரபு

அமைச்சர் பிரபு

Updated on: 
1 min read

ராமநாதபுரம்: “இரு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி, இரண்டாம் இடத்துக்காக. முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள அளவுகடந்த அன்புதான், வாக்குகளாக மாறிக் கொண்டிருக்கிறது” என அமைச்சர் பிரபு தெரிவித்தார்.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி முகம் கண்டுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரபு, “இரண்டு தொகுதி இடைத்தேர்தல் என்பது வேட்பாளர்களுக்கானது அல்ல; தவெக எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பு.

இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி, இரண்டாவது இடத்துக்காக.

முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள அளவு கடந்த அன்புதான், வாக்குகளாக மாறிக் கொண்டிருக்கிறது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தவெக பெறும்.

அனுமதி இன்றி செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்து அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் பிரபு</p></div>
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in