நுகர்வோர் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பணிநீட்டிப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவு

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத்தலை​வர், உறுப்​பினர்​களுக்கு பணி நீட்​டிப்பு வழங்​கும் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை தமிழக அரசு அமல்​படுத்த வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வ​ராக இருந்​தவர் திருநீலபிர​சாத். இவர் 2025ஜூன் 27-ல் பணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டார். இதை ரத்து செய்து புதிய விதி​களின் அடிப்​படை​யில், புதிய தலை​வர் நியமிக்​கும் வரை பணிநீட்​டிப்பு வழங்​க​வும், தமிழகத்​தில் உள்ள மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யங்​கள் மற்​றும் மாநில நுகர்​வோர் குறைதீர் ஆணைய தலை​வர்​கள் மற்​றும் உறுப்​பினர்​களுக்கு பணிநீட்​டிப்பு வழங்​க​வும் உத்​தர​விடக்​கோரி திருநீலபிர​சாத், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்து நீதிபதி எம்​.சுதீர்​கு​மார் பிறப்​பித்த உத்​தர​வு: மனு​தா​ரருக்கு 65 வயதாகிறது. இந்த அடிப்​படை​யில் நுகர்​வோர் பாது​காப்பு சட்ட விதிப்​படி தலை​வர் பதவி​யில் இருந்து மனு​தா​ரர் விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​நிலை​யில் தற்​போது உச்ச நீதி​மன்​றம் 2025 ஜூன் 21-ல் பிறப்​பித்த உத்​தர​வில், மாநில மற்​றும் மாவட்ட நுகர்​வோர் மன்​றங்​களின் தலை​வர், பிற உறுப்​பினர்​களின் பதவிக் காலம் முடி​யும் நிலை​யில் புதிய தலை​வர், உறுப்​பினர்​களை நியமனம் செய்​யும் வரை பணி​யில் தொடர அனு​ம​திக்க வேண்​டும் எனக் கூறப்​பட்​டுள்​ளது.

இதன் அடிப்​படை​யில் மாவட்ட நுகர்​வோர் குறைதீர் மன்​றங்​களின் தலை​வர்​கள் மற்​றும் உறுப்​பினர்​கள் பதவி நீட்​டிப்பு கேட்டு மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர். உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​புக்கு முன்பே பணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி​மன்​றம் நிவாரணம் வழங்க மறுத்​து​விட்​டது. அரசு தரப்​பில், மாவட்ட ஆணை​யத்​தின் தலை​வர்​கள் மற்​றும் உறுப்​பினர்​களை 65 வயதுக்கு மேல் அப்​ப​த​வி​யில் தொடர அனு​ம​திக்க கூடாது என பதில் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அதே நேரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவு தமிழகத்​துக்​கும் பொருந்​தும். அந்த உத்​தரவை அமல்​படுத்​து​வது மாநில அரசின் கடமை. எனவே நுகர்​வோர் ஆணைய தலை​வர்​கள், உறுப்​பினர்​களுக்கு பணிநீட்​டிப்பு வழங்​கும் விவ​காரத்​தில் தமிழக அரசின் நிலைப்​பாட்டை ஏற்​க​முடி​யாது. உச்ச நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே மாவட்ட நுகர்​வோர் ஆணைய தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​களுக்கு பணிநீட்​டிப்பு வழங்​கும் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அமல்​படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்​கைகளை​யும் எடுக்க வேண்​டும்.

தமிழகத்​தில் மாநில மற்​றும் மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யங்​களில் புதி​ய​வர்​கள் நியமிக்​கும் வரை ஏற்​கெனவே இருந்த தலை​வர்​கள் மற்​றும் உறுப்​பினர்​கள் பணி​யில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த உத்​தரவை நிறைவேற்​றியது தொடர்​பாக ஜூன் 12-ல் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Santhanakoodu Festival
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்: திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in