கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் தொகுப்பூதியம் ரூ.25,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் தொகுப்பூதியம் ரூ.25,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று கலை, பண்​பாடு, தொல்​லியல் அருங்​காட்​சி​யகங்​கள் தொடர்​பாக அமைச்​சர் ராஜ்மோகன் பதில் அளித்​தார்.

அப்​போது அவர் வெளி​யிட்ட அறி​விப்பு விவரம்: கரகாட்​டம், கும்​மி, ஒயி​லாட்​டம், கோலாட்​டம், தெருக்​கூத்​து, பறை, சிலம்​பாட்​டம் ஆகிய மரபு​சார் கலைகளை அதன் தரம் மாறாமல் மேம்​படுத்த, கோவை, தஞ்​சாவூரில் ரூ.2 கோடி மதிப்​பீட்​டில் கலை ஆராய்ச்சி மையங்​கள் அமைக்​கப்​படும்.

58 வயது நிறைவடைந்த நலிந்த கலைஞர்​களுக்கு தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் மூலம் வழங்​கப்​படும் ரூ.3,000 நிதி​யுத​வி, கூடு​தலாக 1,500 கலைஞர்​களுக்கு விரிவுபடுத்​தப்​படும்.

நாட்​டுப்​புறக் கலைஞர்​கள் இசைக் கருவி​கள், ஆடை, அணி​கலன்​கள் வாங்​கு​வதற்​காக ஆண்​டு​தோறும் வழங்​கப்​படும் நிதி​யுதவி ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். கலை பண்​பாட்​டுத் துறை​யின் கட்​டிடப் பராமரிப்பு நிதி ரூ.1.16 கோடி​யில் இருந்து ரூ.2 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

கலை பண்​பாட்​டுத் துறை​யின் ​கீழ் உள்ள கல்​லூரி​களில் பணி​யாற்​றும் தொகுப்​பூ​திய ஆசிரியர்களின் ஊதி​யம் ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்​தப்​படும்.

தமிழகத்​தின் பண்​பாட்​டுத் தலங்​களைப் பாது​காக்​கும் வகை​யில், முதல்​கட்​ட​மாக 5 ஆண்​டு​களில் 76 பாது​காக்​கப்​பட்ட சின்​னங்​கள், தொல்​லியல் தலங்​களை சீரமைக்க ‘தமிழ்ப் பாரம்​பரிய பாது​காப்​புப் பணி​கள்’ திட்​டத்​தின்​கீழ் ரூ.49 கோடி ஒதுக்​கப்​படும்.

பட்​டறைப்​பெரும்​புதூர், குற்​றாலம் (நாட்​டுப்​புற அகழ்​வைப்​பகம்), தரு​மபுரி (நடு​கல் அகழ்​வைப்​பகம்) ஆகிய இடங்​களில் காட்​சிப்​படுத்​தும் பணி​கள் ரூ.12 கோடி​யில் மேற்​கொள்​ளப்​படும்.

அகழாய்​வில் கண்​டெடுக்​கப்​படும் பொருட்​களை அறி​வியல் ரீதி​யாக ஆய்வு செய்ய ரூ.2 கோடி​யில் நவீன தொல்​லியல் ஆய்​வகம், மதுரை​யில் ‘தமிழர் நாகரிக அருங்​காட்​சி​யகம்’ அமைப்​ப​தற்​கான திட்ட அறிக்கை ரூ.2 கோடி​யில் தயாரிக்​கப்​படும் என்​பது உள்​ளிட்ட 22 அறி​விப்​பு​களை அமைச்​சர்​ வெளியிட்​டார்​.

கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் தொகுப்பூதியம் ரூ.25,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
தவெக ஆட்சியில் ஊடகங்கள் மீதான தாக்குதல் தொடர்வதாக பாஜக கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in