“கூட்டணிக்கு வருமாறு தவெக அழைத்துள்ளது” - கிரிஷ் சோடங்கர் கருத்தால் திமுக அணியில் சலசலப்பு

“கூட்டணிக்கு வருமாறு தவெக அழைத்துள்ளது” - கிரிஷ் சோடங்கர் கருத்தால் திமுக அணியில் சலசலப்பு
Updated on
1 min read

சென்னை: தவெக தங்​களை வெளிப்​படை​யாகக் கூட்​ட​ணிக்கு அழைத்​துள்ளதாக தமிழக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திமுக இன்​னும் எங்​களைக் கூட்​டணி பேச்சு​வார்த்​தைக்கு அழைக்​கவில்​லை. அதற்காகக் காத்​திருக்​கிறோம். கே.சி.வேணுகோ​பால் மரி​யாதை நிமித்​த​மாக ஸ்டா​லினை சந்​தித்​தார். அப்போது கூட்​ட​ணி, தொகு​திப் பங்​கீடு குறித்து பேசப்​பட்​டது. ஆனால் முடிவு எட்​டவில்​லை. பேச்​சு​வார்த்​தை தொடரும்.

தவெக எங்​களை வெளிப்​படை​யாக கூட்​ட​ணிக்கு அழைத்​துள்​ளது. எங்​களு​டன் கூட்​டணி அமைக்​க​வும் தயா​ராக இருப்​பதாக​வும் தெரி​வித்​துள்​ளனர். காங்​கிரஸின் தொண்டர் பலத்தை தவெக அங்​கீகரித்துள்​ளது என்​பதே இதன் அர்த்​தம்.

ஆனால் தற்​போதைக்கு திமுக-வுடன் பேசி வருகிறோம். பேசி முடித்​திருந்​தால் தேர்தல் பணிகளை தொடங்​க​ 75 நாட்​கள் அவகாசம் கிடைத்​திருக்​கும்.

கடைசி நிமிடத்​தில் எங்​களை ஒரு நெருக்​கடி​யான நிலைக்​குத்தள்​ளி, கொடுப்​பதை வாங்​கி விட்​டுபோக வேண்​டும் என்கிற கட்​டா​யத்​துக்கு ஆளாக விரும்​பவில்​லை. மகா​ராஷ்டி​ரா, பிஹாரில் இப்​படி நடந்​ததை நாங்​கள் பார்த்​திருக்​கிறோம். காங்கிரஸின் உண்​மை​யான வாக்கு வங்கி 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்​ளது. வலிமை​யான தொண்​டர் படை காங்​கிரஸிடம் உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

“கூட்டணிக்கு வருமாறு தவெக அழைத்துள்ளது” - கிரிஷ் சோடங்கர் கருத்தால் திமுக அணியில் சலசலப்பு
T20 WC 2026 தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸி: சூப்பர் 8 ஆட்டத்தில் அபார வெற்றி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in