‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலமான சக்தியாக உருவெடுக்கும்’ - மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்

Updated on: 
1 min read

சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு பலமான சக்தியாக உருவெடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை மீண்டும் வலிமைப்படுத்தி அடிமட்டத்திலிருந்து கட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் "வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்" மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாம்கள் நேற்று (நவ.12) எழுச்சியுடன் தொடங்கின.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற முதல் பயிற்சி முகாமில் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மாநகர் மற்றும் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளைச் சேர்ந்த புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மிகுந்த நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.

ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்சியை இயக்க ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்படி மண்டல காங்கிரஸ் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, அடுத்த கட்டமாக கிளை காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு கிளை அமைப்பதுடன், ஒரு கிளைத் தலைவர், ஒரு பிரதிநிதி மற்றும் ஒரு BLA 2 ஆகியோரை நியமிக்கும் முக்கியப் பணியை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்நாடு காங்கிரஸுக்கு மிகுந்த பலத்தைத் தரும் என்பதோடு, வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் முடிவு செய்யும் தேதியில் இருந்து தொடர் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, இன்று (நவ.13) திண்டுக்கல் மத்திய மாவட்டத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் திண்டுக்கல் மத்திய, கிழக்கு, மேற்கு, மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மற்றும் தேனி ஆகிய 7 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளர்களைச் சந்திக்கச் செல்கிறேன். மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில், மிகுந்த நம்பிக்கையோடு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் நிச்சயம் மீட்டெடுக்கப்பட்டு ஒரு பலமான சக்தியாக உருவெடுக்கும் என்ற உறுதியுடன் நமது பயணம் தொடர்ந்து முன்னேறுகிறது. “நம்பிக்கையுடன் காங்கிரஸ் “ ” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்</p></div>
“மவுன விரதத்திலேயே இருந்தால் எப்படி?”- முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

X