“அதிமுகவை முதலில் காப்பாற்றுங்கள்” - பழனிசாமிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

Updated on
1 min read

சென்னை: ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை அதிமுகவுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடி பழனிசாமி’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்.

மத்தியில் பாஜகவுக்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் பழனிசாமியின் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. கொள்கை கூட்டணி என்றனர். இப்போது பதவிக்காக சென்றுவிட்டனர். இதில் கொள்கை எங்கு உள்ளது?” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p><em>தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்</em></p></div>
நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்: காவலர்கள் மீதான நடவடிக்கைக்கு உதயநிதி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in