

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமர வேலுக்கு ஆதரவாக வேடந்தாங்கல், மொரப்பாக்கம் ஊராட்சிகளில் காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வேடந்தாங்கல் மற்றும் மொரப்பாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
இதில் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்டத் தலைவர் வி.ஆர்.சிவராமன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். இதேபோல் தஞ்சாவூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் விஜய்சரவணனும் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார்.