குதிரை பேர வழக்கில் கைதான 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

குதிரை பேர வழக்கில் கைதான 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: குதிரை பேரம் தொடர்​பான வழக்​கில் கைது செய்​யப்​பட்ட 2 பேருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏஇளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​டது தொடர்​பாக பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் 14 பேரை சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் ஏற்​கெனவே திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மாருக்கு உயர் நீதி​மன்​றம் முன்​ஜாமீன் வழங்​கி​யுள்​ளது.

இந்த வழக்​கில் கைதான சேது​ராஜ், நரேஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்பு இந்த மனு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, இரு​வருக்​கும் ஜாமீன் வழங்​கக் கூடாது என்று அரசுத் தரப்​பில் எதிர்ப்பு தெரிவிக்​கப்​பட்​டது. வாதங்​களைக் கேட்ட நீதிப​தி, இரு​வருக்​கும் நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்.

செந்​தில் பாலாஜி மனு வாபஸ்

இதற்​கிடையே, குதிரை பேர வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் தின​மும் இரு வேளை​யும் ஆஜராக வேண்​டும் என தனக்கு விதிக்​கப்​பட்ட நிபந்​தனையை ஜூலை 30 முதல் ஆக.4 வரை 6 நாட்​களுக்கு மட்​டும் தளர்த்​தக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் செந்​தில் பாலாஜி மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

அதை அவர் வாபஸ் பெற்​றதை அடுத்​து, மனுவை தள்​ளு​படி செய்து உயர்​ நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

குதிரை பேர வழக்கில் கைதான 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
எழும்பூர் நடைமேம்பால பணிகளால் மலைக்கோட்டை உட்பட 9 விரைவு ரயில்களின் சேவை​ நாளை முதல் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in