விஜய், ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பதில் நீடித்த சிக்கல்

விஜய், ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பதில் நீடித்த சிக்கல்
Updated on
1 min read

தமி​ழ​கம் முழு​வதும் சட்​டப்பேரவை தேர்​தலையொட்டி தாக்​கல் செய்யப்​பட்ட வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நேற்று நடை​பெற்​றது. இதில் பெரம்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக, பாமக, நாதக வேட்​பாளர்​களின் மனுக்​கள் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்ட நிலை​யில், தவெக சார்​பில் போட்​டி​யிடும் விஜய்​யின் வேட்​புமனு ஆவணங்​களில் சான்​றொப்​பம் காலா​வ​தி​யான நோட்​டரி வழக்​கறிஞரிடம் இருந்து பெறப்​பட்​டுள்​ள​தாக கூறி பாமக​வினர் ஆட்​சேபனை தெரி​வித்​தனர்.

அத்​துடன் அவர் சொத்து வரி செலுத்​த​வில்லை என்​றும் கூறி அவரது மனுவை நிராகரிக்க வாதாடினர். இதையடுத்து பெரம்​பூர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர் கீதா இரு தரப்​பினரிடையே​யும் ஆவணங்​களை சமர்​பிக்​கு​மாறு தெரி​வித்​தார். இறு​தி​யாக, நோட்​டரி வழக்​கறிஞர் தொடர்​பான உரிய ஆவணங்​களைத் தவெக​வினர் சமர்ப்​பித்​தனர். அதனை ஆய்வு செய்த தேர்​தல் அலு​வலர், சொத்து வரி நிலுவை போன்ற காரணங்​களுக்​காக வேட்​புமனுவை நிராகரிக்க முடி​யாது எனத் தெரி​வித்து விஜய்​யின் மனுவை ஏற்​றுக்​கொண்​டார்.

இதே​போல் வில்​லி​வாக்​கம் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் ஆதவ் அர்​ஜு​னா, சொத்து விவரங்​களை மறைத்​துள்​ள​தாக கூறி, அவரது மனு மீதான பரிசீலனை​யும் நிறுத்தி வைக்​கப்​பட்​டது. அவருக்கு எதி​ராக சுயேட்சை வேட்​பாளர்​கள் முரளி வினோத் மற்​றும் தேவ​ராஜன் ஆகி​யோர் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தனர். ஆதவ் அர்​ஜு​னா​வின் வைப்பு நிதி​யில் உள்ள ரூ.2 கோடிக்கு ரூ.84 லட்​சம் வரை வட்டி வரு​வதை, அவர் வேட்பு மனு​வில் குறிப்​பிட​வில்லை என்று குற்​றம்​சாட்​டப்​பட்​டது.

நீண்ட இழுபறிக்கு பிறகு அவரது வேட்​புமனு ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டது. மேலும், ஆர்​.கே.நகர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர் மரி​யம் வில்​சனின் மனு​வில் சில விவரங்​கள் பூர்த்தி செய்​யப்​ப​டாத​தால் ஏற்​பட்ட தாமதத்​திற்​குப் பிறகு, அவரது மனு​வும் அதி​காரப்​பூர்​வ​மாக ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டது.

விஜய், ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பதில் நீடித்த சிக்கல்
விஜய் சிலையுடன் ஓட்டுவேட்டை: திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ‘வேற லெவல்’ ஐடியா பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in