அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம்: அரசு அறிவிப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம்: அரசு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அரசு அலு​வல​கங்​களில் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ஸ்​-அப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து லஞ்​சம், ஊழலை ஒழிக்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதன்​படி, அரசு அலு​வலர்​கள் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக 94981 80936 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணில் புகார் கொடுக்​கலாம் என்று அரசு தற்​போது அறி​வித்​துள்​ளது. ஊழலைத் தடுக்​கும் நடவடிக்​கைகளை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அறிவிப்பு பலகை

இதுகுறித்து அனைத்து துறை​களின் செயலர்​கள், இயக்​குநர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் லஞ்ச ஒழிப்பு விழிப்​புணர்வு அறி​விப்பு பலகைகளை கட்​டா​யம் காட்​சிப்​படுத்த வேண்​டும்.

அதில், ‘லஞ்​சம் வாங்​கு​வதும், கொடுப்​பதும் குற்​றம்’ என்ற வாசகம் தெளி​வாக​வும், மக்​கள் பார்க்​கும் வகை​யிலும் காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும். இதுத​விர, தமிழிலும், ஆங்​கிலத்​தி​லும் புகார் அளிக்​கும் நடை​முறை​கள் இடம்​பெற்ற மாதிரி அறி​விப்பு பலகை​யும் அலு​வல​கங்​களில் வைக்​கப்பட வேண்​டும்.

அரசுத் துறை​களின் அதி​காரப்​பூர்வ இணை​யதளங்​களி​லும் வாட்​ஸ்​-அப் புகார் எண் மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யின் (ஊழல் தடுப்​பு, கண்​காணிப்பு இயக்​குநரகம் - DVAC) இணை​யதள முகவரியை வெளி​யிட வேண்​டும்.

வாட்​ஸ்​-அப் மட்​டுமின்​றி, dvac@nic.in என்ற மின்​னஞ்​சல் முகவரி மூல​மாக​வும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்​கள் மூல​மாக​வும் பொது​மக்​கள் லஞ்​சம் தொடர்​பான புகார்​களை தெரிவிக்​கலாம்.

எழுத்​துப்​பூர்​வ​மான புகார்​களை ‘இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத் துறை, 293, எம்​கேஎன் சாலை, ஆலந்​தூர், சென்​னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்​சல் மூல​மாகவோ அனுப்​பலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம்: அரசு அறிவிப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in