பருவமழை தொடங்கியுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை: ஆட்சியர்களுக்கு உத்தரவு

அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ்

Updated on: 
1 min read

சென்னை: ‘வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ள​தால் அரசு மருத்​து​வ​மனைகளில் தடையற்ற மருத்​துவ சேவை​கள் வழங்க முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளை எடுக்க வேண்​டும்’ என சுகாதா​ரத் துறை அமைச்​சர் அருண்ராஜ் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இது​தொடர்​பாக அனைத்து மாவட்ட ஆட்​சித் தலை​வர்​கள், மருத்​து​வ​மனை நிர்​வாகி​கள், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்​குநர்​கள், மாவட்ட சுகாதார அலு​வலர்​கள் மற்​றும் சுகாதார துறை அலு​வலர்​களுக்கு சுகாதா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ், செயலர் தாரேஸ் அகமது எழுதி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ளது. மழைக்​காலங்​களில் நோய் பரவல் தடுப்பு, உயி​ரிழப்பு தடுப்பு மற்​றும் தடையற்ற மருத்​துவ சேவை ஆகிய 3 செயல்​பாடுகளை​யும் இலக்​காகக் கொண்டு செயல்​பட வேண்​டும். அனைத்து மாவட்​டங்​களி​லும் பின்​வரும் முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட வேண்​டும்.

குறிப்​பாக தீவிர சிகிச்​சைப் பிரிவு​கள், இதய சிகிச்​சைப் பிரிவு​கள், பச்​சிளங்​குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவு​கள், அறுவை சிகிச்சை அரங்​கு​களில் தடையற்ற மின்​சா​ரம் கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனைகளில் ஆக்​சிஜன் விநியோகம் தடை​யின்றி செயல்​பட​வும், குறைந்​தது 7 நாட்​களுக்கு தேவை​யான அவசரகால இருப்பை பராமரிக்​கவும் நட​வடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். மருத்​து​வ​மனைகளில் அத்​தி​யாவ​சிய மருந்​துகள், நரம்​புவழி திரவங்​கள், கிரு​மிநாசி​னிகள், வயிற்​றுப்​போக்​குக்​கான ஓஆர்​எஸ் கரைசல்​கள், பாம்​புக்​கடி விஷமுறிவு மருந்​துகள், குளோரின் மாத்​திரைகள் மற்​றும் மருத்​துவ நுகர்​பொருட்​கள் குறைந்​தது 7 நாட்​களுக்கு தேவை​யான அளவில் இருப்பு வைக்​கப்​பட வேண்​டும்.

வெள்​ளம் மற்​றும் புய​லால் பாதிக்​கப்​படும் பகுதி​களில் மாவட்ட நிர்​வாகம் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களு​டன் ஒருங்​கிணைந்து மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​பட வேண்​டும். கர்ப்​பி​ணிகள், முதி​ய​வர்​கள், குழந்​தைகள் மற்​றும் நீண்​டகால சிகிச்சை பெறு​வோர் பாது​காப்​பான இடங்​களில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

பிரசவ காலம் நெருங்​கி​யுள்ள கர்ப்​பி​ணிகள் வெள்ள அபாயம் உள்ள பகுதி​களில் தங்​கு​வதை தவிர்த்து, தேவை​யான மருத்​துவ ஆலோ​சனையைப் பெற வேண்​டும். மேற்​கண்ட முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு மருத்​து​வப் பணி​யாளர்​கள் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

<div class="paragraphs"><p>அமைச்சர் அருண்ராஜ்</p></div>
மதுராந்தகம், தாராபுரம் வளர்ச்சிக்காக ரூ.1,545 கோடி திட்டங்கள்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in