துபாய் சாகச‌ நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவையில் ஆட்சியர் அஞ்சலி: முதல்வர் இரங்கல்

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானி நமன்ஸ் ஷ்யால்  உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர். (உள்படம்) நமன்ஸ் ஷ்யால்

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானி நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர். (உள்படம்) நமன்ஸ் ஷ்யால்

Updated on
1 min read

கோவை / புதுடெல்லி: து​பாய் சாகச‌ நிகழ்​வில் உயி​ரிழந்த, இந்​திய விமானப்​படையைச் சேர்ந்த விமானி விங் கமாண்​டர் நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு சூலூர் விமானப்​படை தளத்​தில் கோவை மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் அதி​காரி​கள் அஞ்​சலி செலுத்​தினர். தொடர்ந்​து, இறு​திச் சடங்​குக்​காக நமன்ஸ் ஷ்யாலின் உடல் இமாச்​சலப் பிரதேசத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இமாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்​திய விமானப்​படை விமானி விங் கமாண்​டர் நமன்ஸ் ஷ்யால் கோவை சூலூரில் உள்ள விமான சாகசப் படைப் பிரி​வில் பணி​யாற்றி வந்​தார். இவரது மனை​வி​யும் விமானப்​படை அதி​காரி​யாக சூலூர் விமானப்​படை தளத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். அவரது ஆறு வயது மகள் மற்​றும் பெற்​றோர் சூலூரில் வசித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், துபா​யில் நடை​பெற்ற விமான கண்​காட்​சி​யில் இந்​திய விமானப்​படை​யின் தேஜஸ் போர் விமானம் பங்​கேற்​றது. இந்​தக் கண்​காட்சி கடந்த 21-ம் தேதி நிறைவடைந்​தது. அன்று நடை​பெற்ற விமான சாகச நிகழ்ச்​சி​யில், தேஜஸ் போர் விமானத்தை விங் கமாண்​டர் நமன்ஸ் ஷ்யால் இயக்​கி​னார்.

வானில் தலைகீழாகப் பறந்து சாகசம் நிகழ்த்​திய தேஜஸ் போர் விமானம் திடீரென தரை​யில் மோதி வெடித்​துச் சிதறியது. இதில் பைலட் நமன்ஸ் ஷ்யால் உயி​ரிழந்​தார். இந்த சம்​பவம் பார்​வை​யாளர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது. நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு ஐக்​கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் சார்​பில் நேற்று முன்​தினம் மரி​யாதை செலுத்​தப்​பட்​டது.

இமாச்​சலப் பிரதேசத்​துக்​கு... இதையடுத்​து, நமன்ஸ் ஷ்யாலின் உடல் விமானப் படை​யின் சி130ஜே விமானம் மூலம் சூலூர் விமானப்​படை தளத்​துக்கு நேற்று கொண்​டு​வரப்​பட்​டது. அங்கு கோவை மாவட்ட ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பனவர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கார்த்​தி​கேயன் மற்​றும் விமானப்​படை அதி​காரி​கள், அலு​வலர்​கள் உள்​ளிட்​டோர் மலர்​வளை​யம் வைத்து இறுதி அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் இறு​திச் சடங்​குக்​காக நமன்ஸ் ஷ்யாலின் உடல் சொந்த ஊரான இமாச்​சலப் பிரதேசத்​தின் கங்​ரா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இதற்​கிடை​யில், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘விங் கமாண்​டர்’ நமன்ஸ் ஷ்யாலுக்கு வீர வணக்​கம். அவரது உடல் கோவைக்​குக் கொண்​டு​வரப்​பட்ட காட்​சிகளைக் கண்டு கலங்​கினேன். கோவை சூலூர் விமானப்​படை தளத்​தில் பணிபுரிந்த அவருக்​குத் தமிழகம் தனது அஞ்​சலியைச் செலுத்​துகிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு முதல்​வர் ஸ்டாலின் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானி நமன்ஸ் ஷ்யால்  உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர். (உள்படம்) நமன்ஸ் ஷ்யால்</p></div>
ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in