ரூ.90 ஆயிரம் லஞ்சம்: கோவை பொறியாளர் கைது

ரூ.90 ஆயிரம் லஞ்சம்: கோவை பொறியாளர் கைது
Updated on
1 min read

கோவை: கோவையில், சோலார் பிளான்ட் வளாகத்தில் நெட் மீட்டர் பொருத்த அனுமதி வழங்க ரூ.90 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

கோவையைச் சேர்ந்தவர் தீபன். சரவணம்பட்டியில் சோலார் பிளான்ட்டுக்கு நெட் மீட்டர் பொருத்த மின்வாரியத்தின் அனுமதி கேட்டு, சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் எம்.கதிர்வேல் ரூ.90 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தனுப்பினர். இதனை கதிர்வேல் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ரூ.90 ஆயிரம் லஞ்சம்: கோவை பொறியாளர் கைது
“இது வித்தியாசமான அரசியல்... பழைய சிஸ்டம் அல்ல!” - பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in