ஆயுத பூஜை பண்டிகைக்காக நெகமத்தில் கோழிக்கொண்டை பூக்கள் அறுவடை தீவிரம்

மதுரையில் மல்லி கிலோ ரூ.1,000
பொள்​ளாச்​சியை அடுத்த நெகமம் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள்.படம்: எஸ்.கோபு

பொள்​ளாச்​சியை அடுத்த நெகமம் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள்.படம்: எஸ்.கோபு

Updated on: 
1 min read

பொள்ளாச்சி / மதுரை: ஆ​யுத பூஜை பண்​டிகை நெருங்​கு​வ​தால் நெகமம் பகு​தி​யில் கோழிக்​கொண்டை பூக்​கள் அறு​வடை மும்​முர​மாக நடை​பெற்று வரு​கிறது.

கோவை மாவட்​டம் பொள்​ளாச்​சியை அடுத்த நெகமம் மற்​றும் சுற்​றுப்​புற பகு​தி​களான வெள்​ளாள​பாளை​யம், குள்​ளக்​கா​பாளை​யம் ஆகிய இடங்​களில் செவ்​வந்​தி, கோழிக்​கொண்​டை, அரளி, செண்​டுமல்லி உள்​ளிட்ட பூக்​கள் பயி​ரிடப்​படு​கின்​றன. ஆயுத பூஜை​யின்​போது, கோழிக்​கொண்​டை, செவ்​வந்தி உள்​ளிட்ட பூக்​களுக்கு தேவை அதி​கம் இருக்​கும் என்​ப​தால் செப்​டம்​பர், அக்​டோபர் மாதங்​களில் மஞ்​சள், வெள்ளை செவ்​வந்​தி, கோழிக்​கொண்டை உள்​ளிட்ட பூக்​கள் அதிக அளவில் சாகுபடி செய்​யப்​படும். அடுத்த வாரம் ஆயுத பூஜை வர உள்ள நிலை​யில் தற்​போது செவ்​வந்​தி, கோழிக்​கொண்டை பூக்​கள் மலர்ந்​துள்​ளன.

இதுகுறித்து விவ​சா​யிகள் கூறிய​தாவது: ஆயுத பூஜை விழாவுக்​காக பூக்​களை பறித்து மதுரை, திண்​டுக்​கல், தேனி உள்​ளிட்ட பகு​தி​களுக்கு அனுப்​பும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. தற்​போது ஒரு டன் கோழிக்​கொண்டை பூக்​கள் ரூ.95 ஆயிரம் வரை விற்​கி​றோம். தேவை அதி​கள​வில் உள்​ள​தால், பண்​டிகை நேரத்​தில், கூடு​தலாக விலை கிடைக்​கும்.

மழை​யின்​றி, வறட்சி காரண​மாக இம்​முறை சாகுபடி பரப்​பும், கிளி​கள் பூக்​களை சேதப்​படுத்​து​வ​தால் மகசூலும் குறைந்​துள்​ளது. இதனால், சந்​தைக்கு பூ வரத்து குறைந்​துள்​ளது. நவராத்​திரி விழா தொடங்​கிய நிலை​யில் ஆயுத​பூஜை வரை அனைத்து பூக்​களின் விலை​யும் உயர வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு விவ​சா​யிகள் தெரி​வித்​தனர்.

மதுரை மலர் சந்​தை​யில் பூக்​களின் விலை நேற்று இரு மடங்கு உயர்ந்​தது. இதுகுறித்து பூ வியா​பாரி​கள் கூறிய​தாவது: மதுரை மாட்​டுத்​தாவணி மலர் சந்​தைக்கு வழக்​க​மாக வரும் பூக்​கள் வந்​து​கொண்​டிருக்​கின்​றன. கடந்த வாரங்​களில் பூக்​களின் விலை குறைந்து காணப்​பட்​டது. உதா​ரண​மாக மல்​லிகைப்பூ கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்​பனை​யானது. ஆனால், தற்​போது கிலோ ரூ.1,000-​மாக அதி​கரித்​துள்​ளது.

இதே​போன்று சாமந்தி கிலோ ரூ.250, ஜாதி​மல்லி ரூ.500, முல்லை ரூ.500, ரோஜா ரூ.150, சம்​பங்கி ரூ.200 என அனைத்​துப் பூக்​களின் விலை​யும் கடந்த வாரத்​தை​விட இரு மடங்கு உயர்ந்​துள்​ளது. ஆயுத பூஜைக்கு சில நாட்​களே உள்​ள​தால் இந்த விலை மேலும் உயர வாய்ப்​புள்​ளது. இவ்​​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>பொள்​ளாச்​சியை அடுத்த நெகமம் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள்.படம்: எஸ்.கோபு</p></div>
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in