கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர்
Updated on
1 min read

கும்பகோணம்: தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் அறிவிப்பார் என வேளாண் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2028-ல் நடைபெற உள்ள மாசி மகாமக விழா தொடர்பாக அறநிலைத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.

இந்த விழாவுக்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  பல்வேறு திட்டங்கள் தேவையான வசதிகளை தற்போது தயாரித்து வருகிறோம்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் அறிவிப்பார்.

நிறைவடையாத சுற்றுச்சாலையை குறித்து ஏராளமானோர் என்னிடம் மனு அளித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் என்னென்ன பிரச்சினை இருக்கின்றது என ஆய்வு மேற்கொள்ள அறிவித்துள்ளோம். மீதமுள்ள சுற்றுச்சாலை பகுதியும் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர்
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in