சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்​திட்​டார்.

இதைத் தொடர்ந்​து, அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சிங்​கப்​பெண் அதிரடிப் படை​யில் இடம்​பெறும் பெண் போலீ​ஸார் மற்​றும் பெண் எஸ்​.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. கருப்பு தொப்​பி, கருப்பு ஷூ என பார்ப்​ப​தற்கு மிடுக்​காக காணப்​படும் வகை​யில் இந்த சீருடை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை முதல்​வர் விஜய் கடந்த 29-ம் தேதி தொடங்கி வைப்​ப​தாக இருந்​தது. ஆனால், பல்​வேறு காரணங்​களால் கடைசி நேரத்​தில் இந்த நிகழ்ச்சி தள்​ளிவைக்​கப்​பட்​டது. கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்​காளர்​களுக்கு நன்றி தெரிவிக்​கும் கூட்​டத்​தில் பேசிய முதல்​வர் விஜய், “சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை அடுத்த வாரம் தொடங்கி வைக்​கப்​படும்’ என்று அறி​வித்​தார். அதன்​படி, சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நாளை (ஜூன் 9) மாலை 5 மணிக்கு நடை​பெறும் நிகழ்​வில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்​கிறார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்
“இண்டியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது; 23 கட்சிகள் பங்கேற்க உள்ளன”: காங்கிரஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in