“வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் நிலைத்தோங்கட்டும்!” - முதல்வர் விஜய்

“வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் நிலைத்தோங்கட்டும்!” - முதல்வர் விஜய்
Updated on
1 min read

சென்னை: “தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரனின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம்” என்று தமிழக முதல்வர் விஜய் புகழ்ஞ்சலி செலுத்தியுள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரரின் நினைவு நாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!

மாவீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய் நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரரின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம். வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

“வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் நிலைத்தோங்கட்டும்!” - முதல்வர் விஜய்
டெல்லி பேரணிக்கு செல்ல சிறப்பு ரயிலுக்கு அனுமதி மறுப்பு: இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in